உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தமிழ்க் காப்பியங்கள்

அங்கங்கே புலகுைம் கருத்துக்களால் அதனை அறிந்து கொள்ளலாம். அரிச்சந்திரனுடைய வரலாற்றைக் காப்பியமாகப் பாடும் புலவனது பாவிகம், சத்தியம் வெல்லும் என்பதாகும், இதனை அவ் வரலாறே தெரிவிக்கின்றது. இராமாயணம், பாரதம் முதலிய வற்றில், அறம் வெல்லும், பாவம் தோற்கும்' என்பது போன்ற பல செய்திகள் பாவிகமாக அமைந்துள்ளன.

பாவிகத்தைக் குறித்துத் தண்டியும் பிறரும் கூறிய் இலக்கணத்தை ஆராய்ந்தோம். வட நூலாசிரியர் சிலர் பாவிகத்திற்கு விேருேர் இலக்கணம் அமைக்கின் றனர். மம்மடர் தம் காவ்யப் பிரகாசிகையில், நிகழ்ந்ததை யேனும் எதிர்வதையேனும் கண்முன் நிகழ்வதாகத் தோற்றச் செய்யும் அமைதியே பாவிகம் என்று கூறுவர். -

கவியிற் கூறப்படும் பொருளை உண்மைப் பொருளா கத் தோற்றச் செய்தல், மெய்ப்பாடு என்னும் பெயரா

லும் வழங்கும். பேராசிரியர் மெய்ப்பாடு என்பதன்

பொருளை விளக்கும் இடங்களில் இத்தகைய கருத்தையே கூறுவர்: "மெய்ப்பாடென்பது சொற் கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்', 'கவிப்பொருள் உணர்ந்தால் அதனுனே சொல்லப்படும் பொருள், உய்த்து வேறு கண்டாங்கு அறிதலை மெய்ப்பாடென்ருன்...உணர்ந்த பொருள் பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பாடு என்பது இதன் கருத்து, இக்கருத்தினுல் கவி கண் காட்டும் எனவும் சொல்லுப.'

எனவே, கவிஞர் தம்முடைய சொற் சித்திரத்தால் பொருளை அகக்கண்முன் தோற்றச் செய்யும் ஆற்றல் உடையவர் என்பது புலப்படும்.

1. அத்தியாயம், 10 : 29. -

2. தொல். செய்யுள் 1, டரை. 3. டிெ டிெ 204, உரை.