உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 197

புணர்ப்பாவை முதலியன சித்திரகவி இலக்கணத்தை உரைக்கும் நூல்கள் போலும். -

தண்டியலங்கார ஆசிரியர் மடக்கையும் அதன் விகற் பங்களையும் கூறியபின், கோமூத்திரி, கூட சதுக்கம், மாலை மாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினவுத்தரம், காதை கரப்பு, கரந்துறை செய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்கரச்சுதகம் என்பவற்றைக் கூறுவர். அவை மடக்கலங்காரத்தின் பாலவாய் வரும் என்பர். அந்நூலின் உரையாசிரியர், நிரோட்டம், ஒற்றுப் பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனை, முரசபந்தம், திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடு பாட்டு என்பவற்றையும் உடன் எடுத்துக் காட்டுவர்.

மாறனலங்கார நூலார் சித்திர கவிகள் இருபத் தாறை எடுத்துரைத்தார். அவை: வல்லினப் பாட்டு, மெல்லினப் பாட்டு, இடையினப் பாட்டு, நிரோட்டியம், ஒட்டியம், ஒட்டிய நிரோட்டியம், அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை, வக்கிரவுத்தி, வினவுத்தரம், சக்கர பந்தம், பதும பந்தம், முரச பந்தம், நாக பந்தம், இரத பந்தம், மாலை மாற்று, கரந்துறை செய்யுள், காதை கரப்பு, பிரிந்தெதிர் செய்யுள், பிறிதுபடு பாட்டு, சருப்பதோ பத்திரம், கூட சதுர்த்தம், கோமூத்திரி, சுழிகுளம், திரிபங்கி, எழுகூற்றிருக்கை என்பன. இவை சொல்லணி யுள் மடக்கின் பாற்படும் என்று இவரும் கூறுவர்."

இங்கே அந்நூலின் உரைகாரர் வேறு சில மிறைக் கவிகளைக் கூட்டி உரைப்பர். மாத்திரைச் சுருக்கம், மாத் திரை வருத்தனை, ஒற்றுப்பெயர்த்தல், திரிபதாதி,சதுரங்க

1. தண்டி, கு. 95, 2. மாறன். கு. 270.