உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 209

தொகுதியாகும். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இலக்கிய வரிசைகளைப் போல ஐம்பெருங் காப்பியங்கள் என்னும் வரிசையும் வழங்கி வருகின்றது. அவ் வைம் பெருங் காப்பியங் களாவன: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்பன. இவற்றுள் முன்னைய இரண்டும் கடைச்சங்க காலத்தில் இயற்றப் பட்டவை; ஆயினும் சங்கமருவாதன. பின் மூன்று காப்பியங்களும் பிற்காலத்தில் இயற்றப்பட்டன.

இவ் வைந்தையும் ஒரு சேர வைத்து ஐம்பெருங் காப்பியங்கள் என்று வழங்கும் வழக்கம் எப்பொழுது தொடங்கியது என்று தெரியவில்லை. நன்னூல் உரை யாசிரியர்ாகிய மயிலைநாதர்,

'இனி, இவ்வாறே ஆண்பாற் பொருட் பெயரும் பெண்பாற் பொருட் பெயரும் ஏனைப்பாற் பொருட் பெயரும், இடப் பெயரும், காலப் பெயரும், சினைப் பெயரும், பண்புப் பெயரும், தொழிற் பெயரும், மரபுப் பெயரும் வழுவாமல், ஐம்பெருங் காப்பியம், எண்பெருந் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இவ் விலக்கியங்களுள்ளும், விரிந்த உரிச்சொற் பனுவல்களுள்ளும் உரைத்த வாறு அறிந்து வழங்குக' - என்பதில் இவ்வைம்பெருங் காப்பியங்களைச் சுட்டு கின்ருர். இதல்ை அவர் காலத்துக்கு முன்னரே இவ் வழக்காறு இருத்தல் வேண்டு மென்பது தெரிகின்றது. தமிழ்விடுதூது என்னும் பிரபந்தத்தில்,

1. கன்னூல், 387, உரை,

க. கா-14