உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தமிழ்க் காப்பியங்கள்

தமிழில் ஏறின; யாப்பும் அமைந்தது. அணியிலக்கணம் வட மொழியைத் தழுவியே அமைக்கப்பட்டது. அப்படி வந்த வழக்காறுகளுள் இந்தக் காவியத் தொகையும் ஒன்று. வட நூல்களில் பஞ்சகாவியம் என்ற ஒரு தொகுதி உண்டு. அவை மிகச் சிறப்புடைய காவியங் களாக வடநூற் புலவர்களால் மதிக்கப் பெறுவன. அவை ரீ ஹர்ஷ கவியால் இயற்றப்பெற்ற நைஷத மும், பாரவி இயற்றிய கிராதார்.ஜூனியமும், காளிதாச மகாகவி இயற்றிய ரகுவம்சமும் குமார சம்பவமும், மாககவி இயற்றிய சிசுபாலவதமும் ஆம்.

இந்த வழக்காற்றை உட்கொண்ட தமிழ் நாட் டி எரிற் சிலர் தமிழிலும் ஐம்பெருங் காப்பியங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று எண்ணினர் போலும். அங்ங்னம் எண்ணிய அவர்களுக்குச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிந்தாமணியும் குண்டலகேசியும் வளையா பதியுமே முதல்முதல் நினைவில் தோன்றின போலும் எங்ங்னம் ஆயினும் ஐம்பெருங் காப்பியம் என்று வரை யறுத்துக் கூறும் வழக்கு வடமொழியைப் பின்பற்றியதே என்று தோற்றுகின்றது. - - -

ஐம்பெருங் காப்பியம் என்னும் வழக்கை நினைந்த சிலர் சமீப காலத்தில் ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற ஒரு புது வரிசையைச் சிருஷ்டி பண்ணியிருக்கின்றனர். அவை : (1) உதயண குமார காவியம், (2) நாக குமார காவியம், (3) யசோதர காவியம், (4) சூளாமணி, (5) நீல கேசி என் னவாம். சூளாமணிக்கும் ஏனைய நான்கி னுக்கும் உள்ள வேறுபாடு அஜகஜாந்தரமென்பது அவற்றை ஆராய்பவர்களுக்குப் புலகுைம். உதயண குமார காவியத்தைப்பதிப்பித்த ரீமகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் அதன் முகவுரையில், இது காவியம் என்னும் பெயரை உடையதாயினும், காப்பிய இலக்