உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தமிழ்க் காப்பியங்கள்

உரையாசிரியர்களால் எடுத்துக் காட்டப்படுகின்றன. இத் தமிழ் இராமாயணம் ஒரு காப்பியமே யாகும். இது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாம்.

பாரதம்

பாரதமும் சங்க காலத்தே இருந்து வந்தது. அதைப் பாடிய புலவர்பிரான் பெருந்தேவனர் என்பவர். இந்நூல் யாவராலும் போற்றப்பட்டு வந்ததென்பதற்கு இதனை இயற்றிய ஆசிரியருக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனர் என்ற பெயர் அமைந்தமையே ஓர் அறிகுறியாகும். இதனைப் பாடியதே அவருக்கு ஒரு பெருமையாயின், இதன் பெருமை எங்ங்ணம் இருத்தல் வேண்டுமென்பது சிந்தித்து அறிதற்குரியது. தொல் காப்பிய உரைகளில் இந் நூற் செய்யுட்கள் சில வந்துள்ளன. இதன் கண் வெண்பாவும் ஆசிரியப்பா வும் விரவி அமைந்திருந்தன. இடையிடையே பாட்டிடை வைத்த குறிப்பாகிய உரைப்பகுதிகளும் இருந்தன. அதல்ை இதனைத் தொன்மையென்னும் வனப்புக்கு உதாரணமாகக் கூறுவர். இதற்கு ஒரு பழைய உரை உண்டென்று நினைத்தற்குரிய குறிப்பொன்று தொல் காப்பியம், பேராசிரியர் உரையிற் கிடைத்தல் முன்னர்ப் பருப்பதம் என்ற தலைப்பிற் கூறப்பட்டது.

பத்தாம் நூற்ருண்டில் அரசாண்டு வந்த ராஜ சிம்மன் என்ற பாண்டியன் காலத்தில் எழுந்த சின்னமனூர்ச் சாஸனத்தில் அப் பாண்டியனது மெய்க்கீர்த்தி சொல்லப்படுகின்றது. அதில் அவன் முன்னேர்கள் செய்த பல செயல்கள் அவன்மேல் ஏற்றிக்கூறப்படுகின்றன அம் மெய்க்கீர்த்தியில் உள்ள,