உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தமிழ்க் காப்பியங்கள்

அநபாய சோழன் சிந்தாமணியிலே ஈடுபட்டுப் பயின்று அதனைப் பல படப் பாராட்டிெைனன்றும், அது கண்ட சேக்கிழார், இது இம்மைக்கும் மறுமைக்கும் உதவாது; சிவனடியார் வரலாறுகளே அறியத் தக்கன என்று கூறினரென்றும், அதன் பின் அவ்வரசன் விரும்பத் திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் இயற்றின ரென்றும் சேக்கிழார் புராண ஆசிரியர் உரைத்தார். இவ்வரலாற்றினல் அநபாயன் சிந்தாமணியிற். பெரிதும் ஈடுபட்டிருந்தானென்பதும் அக்காலத்தில் அவனைத் தன்பால் ஈடுபடுத்திய சிந்தாமணி தமிழ்நாட்டார் பலரை வயப்படுத்தியிருக்கும் என்பதும் புலப்படுகின்றன. அதனுலன்ருே இந்நூலை,

"வையம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய

பொய்யில் வான்கதை பொதித்த செந்தமிழ்ச் சிந்தா மணி” (நச். உரைச் சிறப்.)

என்றும், -

'தரைமுற்றும் போற்றிய சிந்தாமணி”

(பாண்டி மண்டல சதகம்) என்றும் புலவர் பெருமக்கள் போற்றுகின்றனர்.

இந்நூல் இயற்றப்பட்ட காலம் 9ஆம் நூற்ருண்டு

என்று கூறுவர்.

வ8ளயாபதி

இதிலிருந்து பல செய்யுட்கள் புறத்திரட்டில் வந்துள்ளன. தொல்காப்பிய உரை, சிலப்பதிகார உரை, யாப்பருங்கல விருத்தியுரை, தக்கயாகப் பரணியுரை யென்பவற்றிலும் வளையாபதி மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுகின்றது. இது காலத்தாற் பிற்பட்டதென்ப தற்கு இதன் செய்யுட்கள் விருத்தம் முதலிய