உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 247

சாந்தி புராணம் என்பது புறத்திரட்டினுல் தெரிய வரும் நூல். அப் புராணத்திலிருந்து சில செய்யுட்கள் அத் தொகை நூலுட் கோக்கப்பட்டுள்ளன. 16-ஆவது தீர்த்தங்கரராகிய சாந்தி தேவருடைய சரித்திரத்தை உணர்த்துவது இது என்று தெரிகிறது.'

மேருமந்தர புராணம் என்பது மேரு, மந்தரர் என்னும்

இருவருடைய சரித்திரத்தைச் சொல்லும் நூல். இதில் வருபவர்கள் ஜைன முனிவர்களிடம் உபதேசம் பெற்று முத்தி அடைகிருர்கள். இதனை இயற்றியவர் வாமனு சாரியார் என்பவர். நீலகேசிக்கு உரை வகுத்தவரும் இவரும் ஒருவரே என்று கூறுவர். இவர் பதினன்காம் நூற்ருண்டின் இறுதியில் வாழ்ந்தவர்.'

இதில் பதின் மூன்று சருக்கங்களும் 1405 செய்யுட் களும் உள்ளன. முதலாவதாகிய விைசயந்தன் முத்திச் சருக்கத்தின் தொடக்கத்தில் கந்தமாலினி என்னும் நாட்டுச் சிறப்பும், வீதசோகம் என்னும் நகரச் சிறப்பும் சில செய்யுட்களால் கூறப் பெறுகின்றன.

இந்நூல் முழுவதும் பேராசிரியர் ரீ அ. சக்கர வர்த்தி, எம். ஏ. அவர்களால் 1923-ஆம் ஆண்டில் பதிப் பிக்கப் பெற்றிருக்கிறது.

யசோதர காவியம் என்பது யசோதரன் என்பவ னுடைய கதையைக் கூறுவது. உயிர்க் கொலையால் நேரும் பாவங்களை விரித்துச் சொல்வது. இதை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஐந்து சருக்கமும் 320 செய்யுட்களும் அடங்கிய இந்நூல் முதல்

1. புறத்திரட்டு, நூன்முகம், ப. Ki, ki.

2. அ. சக்கரவர்த்தி, எம். ஏ : மேரு மந்தர புராணப் பதிப்பு, ஆசிரியர் வரலாறு, ப. iii,