உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தமிழ்க் காப்பியங்கள்

சூடுவார் என்பவர். மற்ருென்று வரதராஜ ஐயங்காரால் இயற்றப் பெற்றது. கூர்ம புராணம், மச்ச புராணம், விஷ்ணு புராணம், கந்த புராணம், விநாயக புராணம், பிரமோத்தர காண்டம், உபதேச காண்டம், சிவதரு மோத்தரம், சிவரகசியம் என்பன புராண வகைகளிற் சேர்ந்தனவே ஆகும். இவற்றில் கந்த புராணம் ஏனைய புராணங்களினும் மிகுதியாகப் படித்து இன்புறும் நிலையில் இருக்கிறது.

12.ஆம் நூற்ருண்டில் இயற்றப்பெற்ற பெரிய புராணம் தமிழில் புதிதாக உண்டான காப்பியமாகும். அத னைப் பெருங் காப்பியம் என்று கூறுவது பொருத்தம் அன்று. அதிலுள்ள வரலாறுகள் பலவாதலின் ஒரு தனித் தலைவனுடைய வரலாற்றை அமைத்துப் பாடும் காப்பியத்தைப் போன்ற விரிவு அதற்கு இல்லை. திருத் தொண்டர்களுடைய வரலாறுகளை விரித்துச் சொல்லும் அது பெரும்பாலும் இறைவன்பால் உள்ள அன்பின் வகைகளையே புலப்படுத்துகின்றது. அதனை அற மென்றேனும் வீட்டுக்கு நெறியென்றேனும் கொள்ள லாம். பின்னதே சிறப்புடையது. பொருளும் இன்பமும் அந்நூல் உணர்த்தவில்லை. அரசர்களின் வரலாறு வரும் இடங்களிலும் வேறு சில இடங்களிலும் பொரு ளோடு தொடர்புடைய செய்திகளும், சுந்தரர் கதையில் இன்பச் செய்திகளும் வந்துள்ளன. எனினும், அவை கவியினுடைய பாவிகம் அல்ல; இடைப் பிற வரலாக வந்தனவே யன்றி நூலின் திரண்ட பொருளுக்கு உதவுவன அல்ல. காப்பியத்துக்குரிய வருணனைகளை அதன்கண் காணலாம். அது சிறு காப்பியமாகக் கொள்வதற்குரியது.

பெரிய புராணம் சைவத் திருமுறைகளில் ஒன்ருகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதன் செய்யுள்நடை ஒரு தனிச் சிறப்புடையது.