உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 தமிழ்க் காப்பியங்கள்

கம்பர் கவிப் பெருமை

கம்ப ராமாயணம் இந்தக் கூட்டத்தினிடையே தலை நிமிர்ந்து நிற்கின்றது. அதிலும் யமகந் திரிபுகளும் சிருங்காரமும் சில இடங்களில் அமைந்தன வாயினும் அக் காப்பியத்தில் பரவியுள்ள சுவைப் பெருங்கடலில் அவை இருக்குமிடமே தெரியாமல் பதுங்கிக் கிடக் கின்றன. -

திருமாலின் அவதாரமாகிய இராமபிரானைப்பற்றிய காப்பியமானலும், கம்பர் சமரச நிலையிலிருந்து பாடு கிருர். அப் பெருமானை, 'ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டயோத்தி வந்தான்’ என்பது முதலிய இடங்களில் மும்மூர்த்திகளும் சேர்ந்த திருவவதாரம் என்று சொல் கி ருர், அரனதிகன், உலகளந்த அரியதிகன் என்று உரைத்துக் கலகம் விளைவிப்பவர் களை அறிவிலோர் என்று சொல்கிருர். இராமபிரானிடம் வந்து அடைக்கலம் புகும் விபீஷணன் அப் பிரானுடைய கருணையை வியக்கும்போது அவனுக்கு நஞ்சுண்ட பெரு

மானுடைய நினைவு உண்டாகின்றது.

'தஞ்செனக் கருதி ேைன

தாழ்சடைக் கடவுன் உண்ட தஞ்செனத் தகைய னன்ருே.

நாயகன் அருளில் நாயேன்”

என்று உருகுகிருன். - - - - -

இவை கம்பருடைய நடுநிலையைத் தெரிவிக் கின்றன. - .. ...' . .

கம்பர்தாம் அக் காலத்தில் இப்படிப் பாடினரேயன்றி அவர் காலத்திலோ அவருக்குச் சற்று முன்னே பின்னே அவரைப்போல விரிந்த மன இயல்பு உடையவராகநின்று பாடிய புலவர்களைக் காண முடியவில்லை. சில புலவர்கள் தம் காலத்து உணர்ச்சிகளுக்கு உட்பட்டு அக்காலத்தின்