உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தமிழ்க் காப்பியங்கள்

யான மரபுகள் உண்டு. அவற்றையும் நன்கு அறிந்து கடைப்பிடிப்பவனே தமிழ்க்கவிஞகை முடியும்.

ஆகவே பழமைக்குப் புதிய உருவமும் புதுமைக்குப் பழைய உரமும் இணையும்படி காப்பியங்கள் வரவேண்டும். ஆங்கிலத்திலோ ரஷ்ய மொழியிலோ உள்ள காப்பிய முறைகளைப் பின்பற்றிப் பல புதிய உத்திகளைத்தமிழிலும் இறக்குமதி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனல் அந்த உத்திகளை இந்த நிலம் ஏற்றுக்கொள்ளுமா என்பதை ஆராய்ந்து, பொருத்தமுள்ளவற்றைப் பொருந்தும் அளவுக்குத் தழுவிக் காப்பியத்தை இயற்ற வேண்டும்.

இங்ங்ணம் பழமையும் புதுமையும் கலந்து மிளிரும் காப்பியங்களே இனி வருங்கால இலக்கியங்களாக இலங்கும் தகுதி வாய்ந்தவை ஆகும்.