பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 27:

"தந்திர வுத்தி குணமத மேயுரை தர்க்கந்தன்னில்

வந்திய லெண்கோள் முதலா யுளமாலை மாற்றுமுன்கு வந்தியல் சித்திர மென்றின் னவுமலங் காரமென்றே தந்திய லச்சிலர் சொன்னர் அவற்றையுஞ் சார்ந்தறியே’’’

என்னும் வீரசோழியக் காரிகையும் அதன் உரையும் இக் கருத்தைத் தெளிவுறுத்தும்.

மாபுராண்ம் பூதபுராணம்

யாப்பிலக்கணங்களில் மாபுராணம் பூதபுராணம் என்பன இரண்டு. இவை மிக விரிவாக அமைந்திருந் தனவென்று தோன்றுகிறது. நாளடைவில் வழக்கொழிந் தன். இலக்கண நூலுக்குப் புராணம் என்னும் பெயர் அமைந்திருத்தல் பிற மொழிக்குப் புதிய செய்தி. அக்கினி புராணத்தில் ஒரு பகுதியில் அணியிலக்கணம் அமைக்கப் பட்டதேயன்றி நூல் முழுவதும் இலக்கணம் அன்று.

படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மரபுராணம், பூதபுராணம் என்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக் கட்கு உபகாரப்படாமையின்’ (தொல். மரபு.97) என்னும் பேராசிரியர் கூற்றில்ை இவ்விரண்டு நூல்களும் விரிந்த பொருளை உடையனவென்பது போதரும்.

பூதபுராணத்தைப்பற்றி நாம் வேறு ஒன்றும் அறியக் கூடவில்லை. மாபுராணத்தினின்றும் பல சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக ஆளப்படு கின்றன. அவ்வுரையில் வந்துள்ள, -

'கழிநெடி லசையுங் காலெழுத் தசையும் r பெயரயற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழியும் மாபுரா ணம்மே”

1. அலங்காரப் படலம், 38.