பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இ ஒளவை சு. துரைசாமி

என்று திருவந்தாதியிலும் பாராட்டி யிருக்கின்றனர். இவ்விரண்டு பாட்டுக்களிலும் ஞானசம்பந்தர் திருவடி சிந்தித்தற் குரியனவாம் என்று வற்புறுத்து கின்றாரன்றோ? சிந்திப்பதால் உண்டாகும் பயனே ஞானப்பேறு என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக் கின்றார். ‘வாழ்க அந்தணர் என்று தொடங்கும் திருப்பாசுரத்துக்கு அவர் பேருரை விரித்து அதன் முடிவில், அப்பேருரையினைத் தாம் எழுதுதற்குத் துணைசெய்தது எந்தை ஞானசம்பந்தப் பெருந் தகையின் திருவடி ஞானமே என்பார், ‘வெறியார் பொழிற் சண்பையர் வேந்தர் மெய்ப்பாசுரத்தைக், குறியேறிய எல்லை அறிந்து கும்பிட்டேனல்லேன்; சிறியேன் அறிவுக்கு அவர் தாம் திருப்பாதம்தந்த, நெறியே சிறிதுயான் அறிநீர்மை கும்பிட்டேனன் பால்” என்று ஒதுகின்றார். ஞானசம்பந்தப் பெருந் தகையின் திருவடிப்பேறு ஞானப்பேறே என யாப்புறுத்தற்கு இதன்கண், அவர்தம் திருப்பாதம் தந்த நெறியென்று சேக்கிழார் பெருமான் கூறு கின்றார். சிவப்பிரகாச சுவாமிகளும் இத்திருவடிப் பேறு வீடு பேறே என்பார். ‘பூவான்மலிமணி நீர்ப்பொய்கைக் கரையினியல், பாவான்மலி ஞானப் பாலுண்டு, நாவான், மறித்தெஞ் செவியமுதா வார்த்த பிரான் தண்டை, வெறித் தண் கமலமே வீடு” என்று ஒதியிருத்தலை நாம் நன்கு அறிகின்றோம். -

ஞானசம்பந்தர் திருவடி பணிவார் பெறும் பயன் ஞானமும்விடும் என மேலே காட்டிய பெரு,