பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் ஒ 225

காகவும் உலக வாழ்வைக் கடலாகவும் உருவகம் செய்யும் பிறிதோரிடத்தே, அடிகள் பல் வகைச் சமயங்களையும் கடற்றுறைகளாக, எடுத்துக் கூறுவது (கழுமல. 16) சமய வேற்றுமையில் ஒருமை காண முயலும் அடிகளது மனப்பான்மைத் தெரிவிக்கிறது.

இனி, சைவ புராணங்கள் சிவபெருமான் மாதொரு பாகனாய்க் கங்கையும் திங்களும் தாங்கிய சடைமுடியும், நெற்றி விழியும் நீலகண்டமும் எடுத்த பாதமும் தடுத்த கங்கையும் புலி யதளாடையும், சூலப் படையும் மழுப்படையும், ஆனேற னுர்தியும் ஆனேற்றுக் கொடியும் பிறவு முடையனாய்த் தோன்றும் தோற்றத்தை எடுத்தோதி, புர மெரித்ததும், தக்கன் வேள்வி தகர்த்ததும், அயன் றலையைக் கொய்ததும், காமனைப் பொடித்ததும், காலனைக் காய்ந்ததும், பிறவும் விரித்துக் கூறுவனவாகும். இவற்றை யெல்லாம் பிள்ளையார் பல திருப் பாட்டுக்களில் விரித்தும் தொகுத்தும் அழகொழுகப் பாடியுள்ளார். மேலும், சிவபெருமான், திங்களைச் சூடுதல் ஆனேறு ஏறுதல் முதலிய செயல்களின் கருத்து இது வென்பாராய்.

‘தூமதி சடைமிசைக் சூடுதல் தூநெறி யாமதி யானென வமைத்த வாறே அறனுரு வாகிய ஆனே றேறுதல் இறைவன் யானென இயற்று மாறே அதுவவள் அவனென நின்றமை யார்க்கும் பொதுநிலை யானென வுணர்ததிய பொருளே

த.செ.-15