பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் ஒ 227

இருக்கும் இறைவன் திருவுருவைச் சிவனெனவே தேறி நிறைந்த அன்புடனே நீராட்டிப் பூவிட்டு அருச்சிப்பதாகும். நெஞ்சத்தில் திருவைந் தெழுத்தை நினைந்து அதன் வாயிலாக உள்ளத்தாமரையில் சிவனைக் கண்டு இன்புறுவதாகும் (கழுமல. 22).

புற வழிபாட்டை, பத்தியாகிப் பணைத்த மெய்யன்பொடு, நொச்சியாயினும், கரந்தையாயினும் பச்சிலையிட்டுப் பரவுந் தொண்டர் (இடைமருது. 19) என்றும், போதும் பெறாவிடில் பச்சிலை யுண்டு புன லுண்டெங்கும், ஏதும் பெறாவிடில் நெஞ்சுண் டன்றே (கழுமல (12) என்றும் எடுத்தோதுவர். இவ் வழிபாட்டின் உறுப்பாக இறைவன் புகழ் கேட்பதும், காலை மாலைகளில் திருக்கோயில் வலம் வருவதும் திருக்கோயில் திருப்பணி செய்வதும் கோயில். 24) கூறப்படுகின்றன. அகவழிபாட்டின் கண் காமம் வெகுளி முதலிய குற்றங்களைப் நோக்கி, ஐம் பொறி களையும் ஒடுக்கி, அன்பும் அருளும் வாய்மையும் மேற்கொண்டு சிந்தைக்கண் சிவபெருமானை எழுந்தருள்வித்து வழிபடுவ தாகும். இதனைப் பாழறையைப் பள்ளியறை யாக்கும் செயல் மேல் வைத்தும் (கழுமல. 4, பாற்கடல் கடைந்து அமுதம் பெறும் செயல் மேல் வைத்தும் (கழுமல. 13) உருவகவணி நலம் திகழச் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார். -

உயிர்கள் ஞானம் பெற்று வீடு பேறடைதற்குரிய பக்குவமெய்துங்கால் சிவபெருமான் குருவாய் வந்து