பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 335

வேந்தியல் அவாவையோ, கடல் வாணிகத்தைத் தமக்கே உரிமையாக்கிப் பிறர் கலம் கடலிற் செல்ல லாகாதெனத் தடுக்கும் சேரலர் செருக்கையோ அவர்கள் உள்ளத்தில் எழுப்பவில்லை. அதனால், அவர்கள் தம்மை யடைந்தார்க்கு உதவிபுரியும் அந்த அளவில் அமைந்தொழுகினர்.

தொண்டை நாட்டில் மேலைப்பகுதிக்குப் பல்குன்றக்கோட்டம் என்ற பெயர் நிலவிற்று. தொண்டைநாடு முற்றும் சோழ வேந்தர் ஆட்சிக் குட்பட்டிருந்ததெனினும் இப்பகுதியில் படைவீடு என்னுமிடத்தைத் தலைநகராகக் கொண்டு சம்புவ ராயர் என்னும் குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் சோழ வேந்தர்கட்கு அவ் வப்போது வேண்டும் படைத்துணை செய்வர். இராசாதிராசன் காலத்தில் படைவீட்டிலிருந்து, ஆட்சி செய்த சம்புவராயன் எதிரிலி சோழன் சம்புவராயன் எனப்படுவன்.

பாண்டியநாட்டு மதுரையில் பராக்கிரம பாண்டியன் இருந்து வருகையில் திருநெல்வேலிப் பகுதியிலிருந்து ஆட்சிசெய்த குலசேகரன் பாண்டி நாடு முழுதிற்கும் தானே தனிவேந்தாக வேண்டு மென்ற ஆசை கொண்டான். அவனுக்குரிய நண்பர்கள், பாண்டிநாடு ஒரு வேந்தனாட்சியில் நிலவுமாயின் அதன் ஆக்கம் பெருகுமெனச் சொல்லி அவனை ஊக்கினர். குலசேகரன் படையும் பொருளும் பெருக்கினான். அவனுடைய மனக்