பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகப்புரை

பேராசிரியர் டாக்டர் இரா. குமரவேலன்

செந்தமிழ்ச் செம்மல், சித்தாந்த கலாநிதி, உரைவேந்தர் பேராசிரியர் ஒளவை துரைசாமி அவர்கள் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அரும்பணிகள் ஈடிணையற்றவை. தம் கலை ஞானத்தால் தமிழ் உலகிற்குச் சிவஞானச் செம் பொருளின் உண்மை நில்ையை உணர வைத்தவர்; தம் மொழி ஞானத்தால் பழந்தமிழ்க் கருவூலங்களின் நுட்பங்களைத் தெளிய வைத்தவர்.

இருபதாம் நூற்றாண்டில் சைவமும் தமிழும் தழைக்க உழைத்த பெருமக்களுள் தமிழ் உரை நடைக்குப் பெருமை சேர்த்தவர்கள் அருளாளர் ஞானியாரடிகளார், தனித்தமிழ்த் தந்தை மறை மலையடிகளார், உரைவேந்தர் ஒளவை துரைசாமி ஆகியோர் ஆவர். இவர்தம் உரைநடைத் தமிழை கற்கண்டுத் தமிழ், கரும்புத் தமிழ், தேன்தமிழ் என்று மூவகையாகப் பாராட்டிக் கூறலாம். மற்ற இரண்டையும் விட மூன்றாவது தமிழே படித்த வர்க்கும் பாமரர்க்கும் மகிழ்ச்சி தருவதாகும்.

ஒளவை தந்த அருந்தமிழை அனைவரும்

அறிந்து போற்றுவதற்கும், படித்து மகிழ்வதற்கும் ஏற்ற ஒரு களஞ்சியமாகத் தமிழ்ச் செல்வம் என்னும்