பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக முடிவு

125


இந் நா.: ஆமாம்! பாபு: நம்ப பாஷையிலே.இவ்வளவு படா சமாச்சார்கள் இருக்குன்னு எனக்கு இப்பத்தான் தெரியுது. வஸ்தாத்தைக் கேட்போம் ...ஜி! ம்ாப் கர்ரோ! நம்ப தமில்லே இவ்வளவு தான் இருக்கா? இன்னும் ரொம்ப ஜாஸ்தி இருக்கா? -

தமி : அன்பரே தமிழ் வற்றாத ஒரு பெருங்கடல். அதனுள் மறைந்து கிடக்கும் முத்துக்கள் விலை மதிகக முடியாதவை. முத்துக் குளிக்கும் மக்கள் தம் மூச்சு வலிமைக்கு ஏற்ற அளவு கடலில் மூழ்கி அள்ளிச் செல்வதுபோல, தமிழ்க்கடலில் மூழ்கும் மக்களும் அதில் உள்ள செல்வங்களைத் தமது அறிவு வலிமைக்கு ஏற்ற அளவு அள்ளிக்கொண்டு செல்லலாம். இதனைத் தடுப்பவர்கள் எவரு மில்லை. ஏனெனில், தமிழ்மொழியும், தமிழர் நெறியும் உலகத்தின் பொதுச் சொத்து. ஆங். நா. ரொம்ப தாங்ஸ் சார் இனிமேலே என் சைல்டுகளுக்கெல்லாம் தமிழைப் படிக்கணும்னு அட்வைஸ் பண்றேன். இந். நா. : என்ன பாபு இது-சைல்டுகளுக்குப் போய் அட்வைஸ் பண்றது? நாமே இப்போ தமிழ் படிக்கணும்னு ஆரம்பிக்கனும் பாபு தமி : ஆம் அன்பர்களே! தமிழைப் படியுங்கள். நன்றா கப் படியுங்கள். அதிலுள்ள செல்வங்களை அள்ளி உங்கள் வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், தமிழ் மக்களாகிய உங்களிடம், தமிழனாகிய நான், தமிழைப் படியுங்கள் என்று, அதிலும் தமிழ் நாட்லிருந்து கொண்டே கூறிக் கொண்டிருப்பது, தமிழ்க் குலத்திற்கே ஒரு மானக் கேடாகும். இந் நா. போதும் பாபு, போதும் ! எங்களுக்கு ரொம்ப லஜ்ஜையாக இருக்குது. எங்களை மாப் செய்து