உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 எப்பொழுதும் கலை இருக்கிறது என்று சொல்லி விடமுடியாது. மேட்ைடு உடை அணிந்த பெண்ணின் நெற்றியிலுள்ள பொட்டு அழகை வெளிப்படுத்துவதில்லை. கரிய கூந்தல் தவழ்ந்தாடும் அழகிய நெற்றியில் நம்நாட்டு உடைக்கு ஏற்பக் குங்குமத்தை இட்டுக் கொள்ளும்போது அங்கே கலையைக் காணலாம். அதுபோலத்தான் கலையழகு தோன்றும்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அறைகளில் தேவையான பொருள்களை அமைத்து வைப்பதிற் கலையைக் காண்டல் இயலும். பொருள்களின் அமைப்பு சில வீடுகளிலே அழகிய வண்ணம் பூசப்பட்ட சுவர், விலையுயர்ந்த கம்பளம் விரித்த தரை, அழகிய பொருள்கள், விலையுயர்ந்த பொருட் குவியல்கள் ஆகியவற்றைக் காண லாம். ஆனால், வெண்மாவு கொண்டு கோலம் இடப்பட்ட முற்றத்திற் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட ஒரு திண்ணையிற் காணப்படும் கலை சில நேரம் அங்குக் காணப்படுவதில்லை. காரணம் அங்கேயும் பொருள்கள் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலோ, செல்வத்தின் பெருமிதத்தை வெளிக்குக் காட்டவேண்டிய அளவிலோ நிரப்பப்பட்டிருத்தல் தான். பொருள்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில், எளிய முறையில் ஆயினும் அழகுணர்ச்சி தோன்றக்கூடிய வகையில் தேவைக்கு அவசியமான பொருள்களை இடத்திற்கு ஏற்ருற் போல வைப்பதுதான் கலை. பொருளேத் தேர்ந்தெடுத்தல் பொருள்களை இடத்திற்கேற்ப அமைப்பதில் கலை மிளிர் கின்றது என்ருல், பொருள்களைப் பொறுக்கி எடுப்பதிலும் கலை காணப்படவேண்டும். விலை மலிவு என்ற காரணத்தைக் கொண்டோ, பெருமைக்காகவோ பொருளை வாங்கி நிரப்பினல் கலையைக் காண முடியாது. நம் அறையின் அமைப்பு என்ன, அந்த அமைப்புக்கேற்ப இப்பொருள் பொருந்துமா, பொருந்துவதோடன்றி அழகு காணப்படுமா என்று உன்னிப்பார்த்துப் பயனுள்ள பொருள்களை வாங்கு வதில் கலை இருக்கிறது என்று சொல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/173&oldid=881077" இலிருந்து மீள்விக்கப்பட்டது