உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 31. கற்றிலன் ஆயினும்-உறுதி நூல்களைத் தான் கல்லாதவனுயி னும். கேட்க-கற்றுணர்ந்தவர் சொல்லக் கேட்டறிக. ஒற்கத்தின்-மனத் தளர்ச்சியில். ஊற்று ஆம் துணை-பற்றுக்கோடாகும். ஊன்று ஊற்று எனத் திரிந்து நின்றது. ஊற்று-பற்றுக்கோடு; ஆகுபெயர். கேட்க-வியங் கோள். 32. செவியிற் சுவை-செவியால் நுகரப்படும் சொற்சுவை பொருட் கவை. வாய் உணர்வு - வாய்ச் சுவைகளை உ ண ரு ம் உணர்வு. அவியினும்-செத்தாலும். செவிச் சுவை அறியார் செத்தாலும் வாழ்ந்தா லும் ஒன்றுதான். செவியின்-செவியால். 33. அற்றம் காக்கும் கருவி - இறுதி வாராமற் காக்கும் கருவி. செறுவார்க்கு - பகைவற்கு. அழிக்கலாகா உள் அரண் என மாற்றுக. 34. மனந் தூய்மை-அறியாமை நீங்கல். செய்வினை தூய்மை-கல் வினை செய்தல். இனந் தூய்மை துவா-இனங் தூய்மை பற்றுக்கோடாக. துவாக என்பதில் 'க' தொக்கது. (தொகுத்தல் விகாரம்). 35. ஆக்கம்-செல்வம். மன்னுயிர்-நிலைபேறுடைய உயிர். 36. பீலி-மயிலின் தோகை. சாகாடு-வண்டி. இறும்-முறியும். சால-மிகுதியாக. பெயின்-ஏற்றில்ை. ஒருவன் வலியயிைனும், எளிய ரென்று பலரொடும் பகைமை கொண்டால் அவ் வெளியர் ஒன்றுகூடிய விடத்து வலியன் அழிந்துபடுவன் என்பதாம். இது பிறிது மொழிதல் அணி. சாகாடும் என்பதில் உம்மை சாகாட்டின் வலிமை மிகுதியைக் குறித்தது. 37. அளவு அறிந்து - பொருளின் எல்லையறிந்து, உளபோலஉள்ளன போலத் தோன்றி. இல்லாகி-இல்லையாகி. தோன்ருக் கெடும்தோற்றமுமில்லாமற் கெடும். 38. காதன்மை-அன்புடைமை. கந்தா-பற்றுக் கோடாக; காரண I T I : அறிவறியார்-அறிய வேண்டுவனவற்றை அறியாதவரை. தேறுதல்-தெளிதல். 39. தேரான்-ஆராயாமல். ஐயுறவும்-ஐயப்பாடும். தீரா இடும்பை, நீங்காத் துயரம். தீரா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 40. வான் நோக்கி-மழையை நோக்கி. உலகு-உலகத்து உயிர்கள். கோல் நோக்கி-செங்கோன்மையை நோக்கி. எடுத்துக் காட்டுவமை அணி. 41. இறை --- அரசன். வையகம் - வையகத்தை. முறை m அவன் செங்கோன்மையே. முட்டாச் செயின் - இடையூறுவரினும் கோடாமல் செய்தால், முட்டாது என்பது முட்டா என வந்தது செய்யுள் விகாரம். (ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/51&oldid=881217" இலிருந்து மீள்விக்கப்பட்டது