உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அருஞ்சொற்பொருள் : இந்தனம் - விறகு. உகம் - யு க ம் . தீண்டன்மின் - தொடாதீர். செயமாது-வெற்றிமகள். இலக்கு - அடையாளம். காயம்-புண். காயம். உடல் கோள்தக்கது-கொள்ளத்தக்கது. உதும்பரதரு - அத்திமரம். அசகம்-கொசு. சஞ்சலம்-துன்பம். வினுக்கள்: 1. வாைேர்க்கு உவப்பாகிய தீ எது? 2. போரில் சிந்தும் இரத்தத்துளி எவற்றை முரசறைந்து கூறும்? 3. இரந்து கோட்டக்க புண் எது? ஏன்? 4. புகழுடம்புபற்றிச் சீவக வழுதி கூறியன யாவை ? 5. சீவக வழுதி அழுக்காறு கொள்ளக் காரணம் என்ன? 6. சீவக வழுதி வஞ்சப்புகழ்ச்சியாக உரைத்தவை யாவை? 7. சீவக வழுதி கூறிய விரவுரையைத் தொகுத்துக் கட்டுரை வடிவில் எழுதுக. - IV. பல்சுவை 1. புறநானூறு புறப்பொருளைப் பற்றிக் கூறும் 400 பாடல்களைக் கொண்ட நூலா தலின் இப்பெயர் பெற்றது. புறம் +நானூறு. அறத்தையும் பொருளையும் பற்றிக் கூறுவது புறம் எனப்படும். இஃது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. காலம் : கி. பி. இரண்டாம் நூற்ருண்டு. பண்டைத் தமிழர் பண்பாடுகளையும் அரசர் வள்ளல் வரலாறுகளையும் இதன் வாயிலாக அறியலாம். அருஞ்சொற்பொருள் : * 1. நாடு ஆக-நாடேயாயினும் ஆகுக. ஒன்ருே எ ன் ப ன எண்ணிடைச் சொற்கள். அவல்-பள்ளம். மிசை-மேடு. நல்லை நன்மையுடையாய். நிலன்-நிலம் என்பதன் போலி. பொதுவியல் : புறப்பொருட்டினைகளாகிய வெட்சி, கரந்தை முதலிய திணைகளிற் கூருதொழிந்தனவும் அவற்றிற்குப் பொதுவாக இருப்பனவும் ஆகிய செய்திகளைக் கூறுவது. பொருண்மொழிக் காஞ்சி : சான்ருேர், உயிர்கட்கு இம்மையினும் மறுமையினும் நன்மை தருவனவாகத் தாம் தெளிந்த பொருளைத் தெரிவிப்பது. 2. வளாகம்.உலகம். குடை-குடையால் நிழற்றிய." ஒருமை-ஒரு தன்மை. நடுநாள்யாமம்-இடையாமம். துஞ்சான்-துயிலாதவளுகி. கடு மா-விரைந்த செலவினையுடைய விலங்கு. ஒருவன்-வேடன். நாழி. நாழியளவினதாகிய உணவு ஆகுபெயர். ஒரொக்கும்-ஒரே தன்மை யனவே. துய்ப்பேம்-நாமே நுகர்வோம். தப்புரு.தவறுவன. o H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/69&oldid=881256" இலிருந்து மீள்விக்கப்பட்டது