இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆசிரியர் மணமக்களை வாழ்த்திப் பின்வரும் திருப்பாடல்களை ஓதுதல்.
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியர் எல்லாம்.
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.
பெரியோர்கள் அரிசி சொரிந்து மணமக்களை வாழ்த்துதல். மங்கல அணியணிந்த மகளிர் ஆலத்தி எடுத்தல்.
குறிப்பு
மணமக்கள் திரும்பவும் மணமேடைக்கு வந்து அமர்தல்.
1. மணமக்களுக்கு அன்பளிப்பு அளித்தல்
2. வாழ்த்துரை கூறல்
3. வாழ்த்திதழ் படித்தல்
4. மணமக்கள் நன்றிகூறல் (அல்லது) பெற்றோர் நன்றிகூறல்தட்டில் தேங்காய்,பழம், வெற்றிலை, பாக்கு வைத்து மணமகனை அழைத்து வரச்செய்து, ஆசிரியர் மணமகனின்