10 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும். திறனும் ஒருங்கேபெற்று மிளிர்ந்தனர். காவிரி வரையில் அவர்கள் ஆட்சி பரவியிருந்தது. சமயம், இலக்கியம், கலை ஆகிய முத்துறை களும் அவர்களுடய ஆட்சியில் ஏற்றம் பெற்றன. அவர்கள் சமஸ்கிருத மொழிக்குப் பேராதரவு காட்டினார்கள். அவர்களுடைய கல்வெட்டுக்களில் செய்திப்பகுதி (அரசனின் ஆணைகள்) தமிழிலும், மெய்க்கீர்த்திப் பகுதி சமஸ்கிருதத்தில் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரிய சிறந்த வரிவடிவத்திலும், காணப்படுகின்றன. பல்லவர் ஆட்சியில் இந்து மதத்தின் இரு கூறுகளான சைவம், வைணவம் இரண்டிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சைவ சமயத்து நாயன்மார்களாலும் வைணவ சமயத்து ஆழ்வார்களாலும் தேவாரம், பிரபந்தங்கள் முதலியன பாடப்பெற்றன. அருளாளர்களான இப் பெருமக்களுடைய பாராட்டத்தக்க பணியின் விளைவாகச் சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் செல்வாக்கிழந்தன. சம்பந்தரும் சுந்தரரும் அப்பரும் பாடிய தேவாரப்பாடல்களும் ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களும் உலகத்தின் சமய இலக்கியத்தில் நின்று நிலவும் தகுதியுடையன. பக்திப் பாடல்கள் என்ற புதுவகை இலக் கியத்துக்கு அவை அடிகோலின. அவற்றின் உள்ளத்தை ஈர்க்கும் தன்மையும் பண்ணுடன் அமைந்த இயல்பும் செய்யுள் துறையில் ஒரு புதிய போக்குக்கு வழிவகுத்தன. மாணிக்கவாசகப் பெருமான் படைத்த திருவாசகம்'பக்தர் எல்லாம் பாராட்டும் ' இயல்பும் வைய மெலாம் போற்றும் சிறப்பும் உடையது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்வதுண்டு. திருவாசகத்தால், ப தமிழ்நாட்டில் சமய மறுமலர்ச்சி வேகம்பெற்றது. இந்தப் பாடல்கள் மக்களிடம் வேரூன்றின ; வீட்டில் தனித்தனியேயும், கோயில்களில் பலர் சேர்ந்து ஒரே குரலில் பல்லவிபோலவும், பாடினார்கள். சமாதி கட்டுவதற்குமட்டுமே கற்களைப்பயன்படுத்தி வந்த நிலையை மாற்றி, பல்லவர்கள் கற்களைக்கொண்டு கோயில்கள் அமைத்தனர். அவர்கள் காலத்திற்குமுன் மரம், மண், செங்கல், உலோகங்கள் ஆகியவற்றாலேயே கோயில்கள் கட்டப்பட்டன. மலையைக் குடைந்து சிவனுக்குக் குடைவரைக்கோயில் கட்டிய முதல் அரசன் மகேந்திர பல்லவன் ஆவான். சேரர் சேரர் மேற்குக் கடற்கரையில் ஆட்சிபுரிந்தனர். யானைத்தந்தம், வாசனைப்பொருள்கள் முதலியவை பெரிய அளவில் சேர நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின. பாண்டிய,
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/22
Appearance