இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்தியாவின் சில முக்கியமான பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் மரபு, பண்பாடு, ஆகியவற்றை விளக்கும் புத்தகங்கள். இந்திய மரபு - பண்பாட்டு வரிசையின்கீழ் வெளியிடப்படுகின்றன. வெவ் வேறு பகுதியினரிடையே நிலவும் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், பழங்கதைகள், குறி சொல்லும் முறைகள், மந்திர ஜாலங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், நாட்டுப் பாடல்கள், நடனங்கள், நாடகங்கள், ஆகியவை இப் புத்தகங்களில் விவரிக்கப் படுகின்றன. நம் நாடு இவ்விஷயங்களில் செழிப்படைந்து விளங்குவது அந்தந்த மக்களின் இயல்புகளைத் தெளிவாக விளக்கிக் காட்டும் சாளரங்களாக இவை விளங்குவதுடன், அவர்களிடையே நிலவும் பல நுண்ணிய பண்பாட்டு ஒற்றுமைகளையும் உணர்த்து கின்றன. இந்த ஒற்றுமையை வலுப்படுத்துவதே இந்த வரிசையின் நோக்கம்.