உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் வியாபாரத்தில் ஏற்பட்ட திடீர்ப் ஏற்பட்ட திடீர்ப் பெருக்கத்தாலும் அரசாங்க ஆதரவாலும் சில சாதிகளில் செல்வம் பெருகி வழிகிறது. மேல் சாதியார் மட்டும் குடியிருக்கும் பகுதிகளில் யார் ஏழை, யாருக்குப் பணம் உடனடி தேவை, என்பவற்றை இவர்கள் அறிந்து, மிகக் கூடுதலான விலை கொடுத்து ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, மேல் சாதியினரின் கோட்டைக்குள் புகுந்துவிடுகின்றனர். இதனால் ஒரு சாதியார் மட்டும் வாழ்ந்து வந்த தெருவில், பலரும் சேர்ந்து வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. படிப்படியாகிய அந்தத் தெருவில் புதிய சாதியினர் மேலும் புகுந்து அதை எல்லாச்சாதியின் ருக்கும் உரியதாகச் செய்து விடுகின்றனர். முதலில் அங்கு படை யெடுத்தவர் கொடுத்த கூடுதலான விலை, அவருடைய சாதியின் மகமைப் பணத்திலிருந்து அவருக்கு ஈடு செய்யப்படுமென்று சொல்லப்படுகிறது. . சமூக பொருளாதார நிலை இந்தியாவின் ஏனைய பகுதிகளில் போலவே தமிழ்நாட்டிலும், மக்கள் சமுதாயத்தின் தேவைகளை அனுசரித்துத் தாங்களே பண்டங்களை உற்பத்தி செய்ய வேண்டும், என்பதே குறிக்கோளாக இருந்து வந்திருக்கிறது. வாரம் ஒரு கிழமையில் நடக்கும் சந்தை யிலும், குறிப்பிட்ட வியாபார நகரங்களில் அல்லது திருவிழாக் காலங்களில் கூடும் பெரிய சந்தைகளிலும், மக்கள் தங்களிடமுள்ள உபரிப் பொருள்களைக் கொடுத்துத் தங்களிடம் இல்லாததும் தங்க ளுக்குத் இன்றியமையாப் பொருள்களைப் பெற்றுக்கொண்டனர். இந்தப் பண்டமாற்று முறையே பெருவாரி யாக அமுலில் இருந்தது. தேவையானதுமான திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களில் கூடும் சந்தைக்கு வடக்கன்சேரிக் கிராமத்தினர் கொண்டுவரும் ஈராழி முண்டுகளை, மக்கள் அரிசி அல்லது உபரியாகத் தங்களிடமிருக்கும் பிற பொருள்களைக் கொடுத்து வாங்கிக்கொள்ளுவதை இன்றும் காணலாம். வரவர இந்தப் பண்டமாற்று முறை, பணப்புழக்கத் தால் கைவிடப்பட்டு வருகிறது. சிற்றூர்களிலும் கடைகள் வந்து விட்டன. கடைகளில் எல்லா வகையான பொருள்களும் விற்பனை யாகின்றன. ஆகையால் பண்டமாற்று முறை ஒழிந்துவிட்டது. விவசாயக் கருவிகள், கால்நடைகள் முதலியவற்றை விற்கவும்