உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் பதற்கும், எதிர்காலத்தை ஆராய்ந்து ஜாதகம் பார்ப்பதற்கும் சிறு கட்டணங்களை வசூலித்தார்கள். சுதந்தரம் வந்தபிறகு, சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர் களிடம் சாதி அடிப்படையிலும், பணம், சித்தாந்தங்கள், அரசியல் கட்சிகள் ஆகிய அடிப்படைகளிலும் அரசியல் ஈடுபாடு பெரிய அளவில் காணப்படுகிறது. வயதானவர்கள்கூட, தங்களைவிட இளமையானவர்களுக்கு, அவர்கள் மேல்சாதியாராக இருந்த காரணத்திற்காக மதிப்புக் கொடுப்பது என்ற பழைய மரபு இப்போது நிலவ வில்லை. சாதி வேறுபாடின்றி, எல்லோரும் சம உரிமை கேட்கின்றனர். நகரங்களில் வேலைகள் கிடைப்பதால், உடற்கட்டும் இளமையும் உள்ளவர்கள் பட்டினங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். கிராமங் களில் வயதானவர்களும் உடல்நலமில்லா தவர்களும் வேலை கிடைக் காதவர்களுமே உள்ளனர். கிராமங்களிலுள்ளவர்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அடிக்கடி அருகேயுள்ள நகரங்களுக்குச் சென் று உணவு விடுதிகளில் சாப்பிட்டுத் திரைப்படம் பார்த்துத் திரும்புகின்றனர். ஏராளமான சாலைகள் நாட்டுப்புறத்திலும் போடப்பட்டு, பட்டி தொட்டிகளுக்கெல்லாம் பஸ்கள் செல்லுகின்றன. இதனால் கிராமங் களிலும் நகரங்களின் சாயலைக் காண்கிறோம், கிராமங்களிலும் இக்கால முறைப்படி புதிய பாணிகளில் வீடுகள் கட்டப்படுகின்றன. வசதியுள்ளவர்கள், கிராமத்தில் கட்டியிருக்கின்றனர். அவற்றிலும் நீராடும் அறை, கழிப்பு வசதிகள், படுக்கை அறைகள், குளிர் சாதனப் பெட்டி, வானொலிப் பெட்டி முதலியன உள்ளன. உறுதியாகக் கட்டப் பட்டதும் முன்தலைமுறையினரின் தொடர்பு உடையதுமான பூர்வீக மான வசதியான வீடுகளை இடித்துத் தள்ளி அவற்றுக்குப் பதிலாகப் புதிய பாணியில் கவர்ச்சி மிக்கதும் எடுப்பான புறத்தோற்றமுடையது மான புதுக் கட்டிடங்களைக் கட்டுவது நாகரிகமாகவும் கௌர மாகவும் கருதப்படுகிறது. சமுதாயத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் புதுமை மோகம் ஊடுருவி வருகிறது. நகரங்களிலுள்ளது போன்ற வீடுகளைக் இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் வறட்சியான பல பகுதிகள் உள்ளன. அங்குள்ள ஏழைகள், விவசாய வேலை செய்ய- குறிப்பாக நாற்று நடவும் கதிர் அறுவடை செய்யவும் - அருகேயுள்ள வளமான மாவட்டங்களுக்குச் சென்று மூன்று நான்கு மாதம் கூலி வேலை செய்து வீடு திரும்புகின்றனர். இது தவிர, வெளிநாடு