உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் அதிகரித்துள்ளது. களின் உபயோகம் சாயன உரத்தை உழவர்கள் தாராளமாக உபயோகிக்கிறார்கள். இவற்றால் உணவுப் பொருள் உற்பத்தி பெருகியிருக்கிறது. உணவுப் பொருள்களுக்குப் பதிலாகப் பணப் பயிர்களான பருத்தி, மணிலாக்கொட்டை,கரும்பு ஆ கியவற்றைப் பயிரிடும் மனப்பாமை பெருகிவருகின்றது. பஞ்சு, வனஸ்பதி, சர்க்கரை ஆலைகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டி யிருப்பதே இந்த மன நிலைக்கு வித்தாக அமைந்தது. குடிசைத் தொழில்களில், காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலை நெசவும் மதுரையில் சுங்கடிச் சேலைகளை நெய்து சாயமிடுவதும் தனிச் சிறப்புடையன. மதுரைக்குத் தெற்கேயுள்ள வறண்ட பகுதிகளில், தீப்பெட்டித் தொழில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் ஐந்தில் இரண்டு பங்கு இங்குதான் செய்யப்படுகிறது. இந்திய மாநிலங்கள் மொழிவழியிலாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய மொழிகள் யாவும் ஏற்றம் பெற்று வருகின்றன. மலேசியா, சிங்கப்பூர், பீஜீ, மொரிசுத் தீவு, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் லட்சக் கணக்கான மக்கள் தமிழ் மொழியைப் பேசுகிறார்கள். தமிழ் இலக்கியங்களை, யுனெஸ்கோ (ஐ.நா. கல்வி விஞ்ஞான - கலைக் கழகம்) ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த் திருக்கிறது. கோலாலம்பூர், சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் உலகத் தமிழ் மாநாடுகள் கூடியிருக்கின்றன. இருபது நாடுகளின் ஆதரவுடன் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் சென்னை யில் இயங்கிவருகிறது. எனவே, தமிழ் மொழி உலகமொழியாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். . சமயத் துறையிலும், ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பழைய கோயில்களுக்குத் திருப்பணி செய்வதும், புதிய கோயில்களைக் கட்டு வதும் பெரிய அளவில் திகழ்கின்றன. இந்தப் புனிதமான பணிகளை அரச வம்சங்கள் அல்லது பரம்பரையாக இவற்றில் ஈடுபாடு கொண்ட குறிப்பிட்ட ஓரிரு சாதிகள்தான் செய்வது என்ற நிலை இப்போது இல்லை. காலம் மாறிவிட்டது. இந்நாளில் திருப்பணி பலரால் செய்யப்படுகிறது; மக்கள் அனைவரும் அவற்றுக்கான செலவைச் சிறு சிறு நன்கொடைகள் மூலம் ஏற்கின்றனர். இந்துக்கள் மதம் மாறுவது என்பதே இப்போது கிடையாது. எல்லா மதத்தினரும் ஒற்றுமையாகவும் கூட்டுறவுடனும் தாராள மனப்பான்மையுடனும் கலந்து பழகுகின்றனர். ஒவ்வொரு மதத்துக்குள்ளும் நிலவிய உட்பூசல்களும் குறைந்துவருகின்றன. சைவ-வைணவ பேதங்கள் .