உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மதமும் மந்திரமும் சடங்குகள் பாமர மக்களுடைய ஒவ்வொரு நாள் வாழ்வும் மதத்தோடு பின்னிப் பிணைந்தது. பிறந்த வினாடி முதல் இறக்கும் வினாடி வரை அவர் களுடைய வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு சடங்கைச் செய்து திருப்தி அடைகிறார்கள். கடவுளரிடம் உள்ள அச்சமும், முன்னோர் வழக்கத்தை மீறாமல் நடந்துகொண்டால்தான் வாழ்க்கை வசதியான தாய் கவலையில்லாததாய் அமையும் என்ற நம்பிக்கையும் சேர்ந்து, இந்தச் சடங்குகளை விடாமல் செய்ய மக்களைத் தூண்டுகின்றன. மதத்தின் வாயிலாகத் தேசிய ஒருமைப்பாடு இந்தியா என்ற பரந்த நிலப்பரப்பை ஒரே நாடாக ஆக்குவதற்கு இந்து மதம் பெரிதும் துணைபுரிந்திருக்கிறது. இந்துக்கள் இந்தியா வெங்கும் இருக்கிறார்கள். அவர்களுடைய புனிதமான தலங்களும் ஜோதிர் லிங்கங்களும் புகழ்பெற்ற திருவிழாக்களும் இமயம் முதல் குமரி வரை உள்ளன. காசி இராமேசுவரம் என்று ஒரே சொல்லாகச் சொல்வது தமிழ் மரபு. அதைக் கேட்கும்போது, இந்த இரு ஊர்களும் ஒரே ஆற்றின் கரையில் எதிரும் எதிருமாக இருப்பது போல நினைக்கத் தோன்றும்! காசியாத்திரையை மேற்கொள்ளும் எந்த இந்துவும் இராமேசுவரத் திற்குப் போகத் தவறுவதில்லை. இராமேசுவரம் தமிழ்நாட்டில் இருப்பதால், தமிழர்கள் காசி என்னும் வாரணாசிக்கும் செல்ல வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டிருக்கிறார்கள். காசிவிசுவநாதர் கோயிலில் தமிழ் நாட்டு வணிக சமூகத்தாரான செட்டிநாட்டு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பல ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். காலை 4 மணிக்கு திருவனந்தல், 11-30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 9 மணிக்கு சாயரட்சை ஆகிய பூசைகளும்