உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மூலிகைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

தமிழ்நாட்டு மூலிகைகள்

இதனால் புறத்தோல் சிதைகிறது. இந்த இரண்டாம் நிலை வளர்ச்சியால் பெரிசைக்கிள் வளையம் அங்கங்கே உடைந்து, அப்பகுதியின் புறணியின் பாரன்கைமா செல்களினால் நிறப்பப்படுகிறது. இந்தப் பாரன்கைமா செல்கள் பின்பு கடின செல்களாக மாறுதல் அடைகின்றன. நார்கள் பெரிது நீண்டும். கூர்மையான மற்றும் மழுங்கிய நுனிகளுடன், 465-750-1275-1675 மைக்ரான் நீளத்தில், கவர்கள் 20-28 மைக்ரான் கனத்தில், சாய்வான துளைகளுடனும், கால்வாய் போன்ற அமைப்புகளுடனும் காணப்படும்.

புளோயம், துளைக்குழாய் (sieve tube) கம்பேனியன் செல் மற்றும் புளோயம் பாரன்கைமாவினால் ஆனது. புளோயம் நார் பொதுவாகக் காணப்படுவதில்லை. ஸைலம், டிரகியா, டிரகீட்ஸ், ஸைலம் பாரன்கைமா மற்றும் ஸைலம் நார்களால் ஆனது. ஸைலம் வெஸ்ஸல் குட்டையாய் பீப்பாய் போன்றமைப்பில் நனியில், குறுக்கில் அமைந்த கவரும் எளிமையான துளைகயையும் கொண்டது. வெஸ்ஸலின் பக்கங்களில் விளிம்புகளுடன் கூடிய துளைகள் உண்டு. டிரகீட்ஸ்கள் நீண்டு சில சமயம் கலட்டை போன்று பிரிந்த நுனிகளையுடையன. ஸைலம் நார்கள் விப்ரிபார்ம் வகையைச் சார்ந்தவை; சாய்வான, மிகச்சிறிய விளிம்புள்ள துளைகளைக் கொண்டவை, சில மெல்லிய சுவர்களையும், குறுக்குச் சுவர்களையும், சில கனமான சுவர்களையும் உடையன. ஸைலம் பாரன்கைமா செல்கள் ஒழுங்கற்ற வடிவத்துடன் விளிம்பற்ற துளைகளையுடையன.

மருந்தியல் ஆய்வுகள்

ஈஸ்வரமூலி

வேரிலிருந்து

பிரித்தெடுக்கப்பட்ட

அரிஸ்டோலிக் அமிலம், சிற்றெலிகளில், கருவானது கருப்பையில் புதைவதைத் (implantation) தடுத்தது. இப்பொருள் 60 மி.கி./ கி.கி. உடல் எடை என்ற அளவில் 90.9% கருப்புதைவைத் தடுத்தது. கருவுறுதலுக்குப்பின் 6 அல்லது 7வது நாளில் மேற்கண்ட அளவில் 100% தடுப்பும், 10 மற்றும் 12வது நாளில் கொடுத்தபொழுது முறையே 20% மற்றும் 25% கருப்புதைவுத் தடுப்பும் காணப்பட்டது (Pakrashi and Chakrabarty, 1978; Pakrashi and Shaha, 1978).