பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிருபடலம் 165 புலவர் ஏத்தும் புத்தேள் நாட்டொடு முதுகாஞ் சிய்யோடு காடுவாழ்த்து உளப்பட மையறு சீர்த்தி வருமிரு மூன்றும் - பொய்தீர் காஞ்சிப் பொதுவியல் பால." இதைப்போலவே இந்நூலின் முதல் நூலாகிய பன்னிரு படலத்திலும் நிலையாமையை உணர்த்தும் காஞ்சிப் பொது வியல் இருக்கத்தான் செய்யும். எனவே, காஞ்சி என்னும் "கரடி விட்டு, தொல்காப்பியத்திற்கும் பன்னிரு படலத்திற்கும் பகை மூட்டி, பன்னிரு படலத்திலிருந்து தொல்காப்பியரை விலக்க முடியாது. 'குட்டித் தொல்காப்பியம்' என்று கூறப்படும் இலக்கண விளக்க நூல் - உரை இரண்டின் ஆசிரியராகிய வைத்தியநாதர், இளம்பூரணரோடு சேர்ந்துகொண்டு, சில இடங்களில் பன்னிரு படலத்தைக் குறைகூறித் தாக்கியிருப்பினும், அவன் கெட்டான் குடிகாரன், எனக்கு இரண்டு மொந்தை போடு' என்னும் கதையே போல, சில இடங்களில் தம்மையும் அறியாமல் பன்னிருபடலத்தின் பாதையில் சென்றுள்ளார் என்னும் செய்தி யும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. பன்னிரு படலத்திற்கு ஏற் புடையனவாக வைத்தியநாதர் கூறியுள்ள சில பகுதிகள் வருமாறு: வெட்சிக்கு எதிரான கரந்தையையும் உழிஞைக்கு எதிரான நொச்சியையும் இவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார் . இதனை, இலக்கண விளக்கம் - புறத்திணையியலில் உள்ள, "வெட்சியும் உழிஞையும் வேற்றுவினை உடைமையின் உட்குவரு கரந்தையும் நொச்சியும் சூடுதல் அவ்வினை மருங்கின் அமைந்ததொல் வழக்கே’ என்னும் (3) நூற்பாவால் அறியலாம். வெட்சி ஆகவர்தல் (வெட்சி), ஆமீட்டல் (கரந்தை) என இருவகைப்படும் என்றும், உழிஞை அரணை முற்றுதல் (உழிஞை), அரணைக் காத்தல் (நொச்சி) என இருவகைப்படும்’ என்றும் கூறியுள்ளார் இதனை,