பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


254 தமிழ் நூல் தொகுப்புக் கலை ளன. பழைய இலக்கண இலக்கிய உரையாசிரியர்களுள் ஏறக் குறைய முப்பதின்மர் இந்நூற் பாடலைத் தத்தம் உரைகளில் மேற்கோளாகக் காட்டியிருப்பதிலிருந்து, இந்நூலின் மாண்பு விளங்கும். பிற தொகை நூல்களிலும், குறுந்தொகைப் பாடல் களே மிகுதியாக மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன. இந்நூலிலிருந்து, ஏற்க்குறைய இருநூற்று முப்பத்தைந்து பாடல்கள் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்டுள்ளமை யைக் கொண்டு, இந்நூல் தொகுப்பின் இன்றியமையாமை புலனாகும். நச்சினார்க்கினியர், ஏறக்குறைய இருபது இடங் களில் நூற்பெயரைக் குறிப்பிட்டே பாடல்களை எடுத்துக் காட்டியுள்ளார். நூற்பெயர் குறிப்பிடாத இடங்கள் பல உள. குறுந்தொகையில், குறிஞ்சித் திணைக்கு 146 பாடல்களும், பாலைக்கு 91 பாடல்களும், நெய்தலுக்கு 71 பாக்களும், முல் லைக்கு 45 பாடல்களுமாக மொத்தம் 401 பாடல்கள் உள் ளன. இவற்றுள் 9 அடிகள் கொண்டதும், நற்றிணையைச் சேர்ந்த்து என்று கருதப்படுவதுமாகிய 307 ஆம் பாடல் பாலைத்திணையாதலின், அதனை நீக்கிவிடின் பாலைத் திணைக்கு 90 பாடல்களே உரியன எனக் கொள்ளவேண்டும். குறுந்தொகைப் பாடல்களின் நயத்தில் இறங்குவோமா யின் ஒரு தனி நூலாக விரியுமாதலின், தொகுப்புக்கலை பற்றிய இந்த ஆராய்ச்சி நூலில் அது தேவையில்லை எனக் கருதி இம்மட்டில் அமைவோம். இந்தப் பொதுவிதி எல்லாத் தொகைநூல்கட்கும் பொருந்தும்.