பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 தமிழ் நூல் தொகுப்புக் கலை புறம்புதை தாழ்ந்த சடையன் குறங் கறைந்து வெண்மணி யார்க்கும் விழவினன் நுண்ணுற் சிரந்தை யிரட்டும் விரலனிரண் டுருவா வீரணி பெற்றவெழிற் றகையன் நேரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறேர்க்கும் பண்பின் மறுமிடற்றன் தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட் குயர்கமா வலனே." தொல்காப்பிய உரையில் பெரும்பாலான பாடல்களை நூற்பெயருடன் கொடுக்கும் நச்சினார்க்கினியர், இந்தப் பாடலுக்கு உரிய நூற்பெயரைக் கூறாது விட்டிருப்பது நமது தீப் பேறே. அப்படியிருக்கவும், இந்தப் பாடல் பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்தாயிருக்கலாம் என ஒரு தோற்றமாக இக் காலத்தினர் இதனை எடுத்துச் சேர்த்துள்ளனர். இது பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலே என்பதை நாம் ஆராய்ந்து நிறுவ முடியும்: - 'அமரர்கண் முடியும் அறுவகையானும் என்னும் தொல்காப்பிய நூற்பாவின் உரையிடையே, கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு எடுத்துக்காட்டுத் (உதாரணம்) தரவந்த நச்சினார்க் கினியர், எரியெள்ளுவன்ன நிறத்தன்' என்று தொடங்கும் இந்தப் பாடல் முழுவதையும் தந்து, இப்பாடலின் கீழே, 'இது கடவுள் வாழ்த்து” தொகைகளிலும் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன் கண் அடங்கும் என வரைந்துள்ளார். கடவுள் வாழ்த்துக்கு எடுத்துக் காட்டாகத் தொகை நூல்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் உள்ள கடவுள்வாழ்த்துப் பாடல்களையே விதந்து குறிப்பிட் டுள்ள நச்சினார்க்கினியரால் காட்டப்பட்டுள்ள எரியெள்ளு வன்ன நிறத்தன்' என்னும் கடவுள் வாழ்த்துப் பாடலும், ஏதேனும் ஒரு தொகை நூலைச் சேர்ந்த பாடலாகத் தானே இருக்கக் கூடும்? தொகை நூல்களுள் பதிற்றுப்பத்தில் தவிர மற்றவற்றில் எல்லாம் கடவுள் வாழ்த்துப் பாடல் இருப் பதால், இந்தப் பாடல் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப்