பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபது பரிபாடல் 353 அவற்றுள், பாப்பாவினம்' என்னும் நூலின் ஆசிரியரால் இயற்றப்பெற்றுள்ள நான்கு பரிபாடல்கள் குறிப்பிடத்தக்கன. நூலின் ஆட்சியும் மாட்சியும் பதின்மூன்றாம் நூற்றாண்டினர் எனப்படும் பரிமேலழகரும், பதினான்காம் நூற்றாண்டின்ர் எனப்படும் நச்சினார்க்கினிய ரும் பரிபாடல் பாடல் பகுதிகளைத் தம் உரைகளில் எடுத் தாண்டுள்ளனர். பதினாறாம் நூற்றாண்டிற்கு முன் தொகுக் கப் பட்டதாகச் சொல்லப்படும் புறத்திரட்டில், பரிபாடல் பாடற் பகுதிகள் ஆறு இடம் பெற்றுள்ளன. எனவே, பதி னைந்தாம் நூற்றாண்டு வரையும் எழுபது பரிபாடல்களும் முழு உருவத்தில் ஆட்சியில் இருந்தமை பெறப்படும். கடலில் அமிழ்தம் தோன்றியதாகக் கதை சொல்லப் படுகிறது. கடைச் சங்கம் என்னும் கடலிலிருந்து பரிபாடல் என்னும் அமிழ்தம் தோன்றியதாம். இதுபலராலும் பெயர்த் தெழுதிப் படிகள் எடுக்கப்பட்டும் பொருள் விளக்கிப்பட்டும் பாடப்பட்டும் பரவியிருந்ததாம். இந்நிலையில், அரசு மாற்றங் களினாலும், படியெடுப்போர், பாடுவோர் முதலியோரால் செய்யப்பட்ட தவறுகளினாலும் பரிபாடல் தனது பழைய உருவத்திலிருந்து மாறுதல் பெற்றிருந்ததாம். இதனைப் பரிமேலழகர் கவனித்துத் திருத்தி ஒழுங்குசெய்து உரையெழுதி னாராம். இச்செய்திகளைப் பின்வரும் உரைச் சிறப்புப்பாயிரப் பாடலால் அறியலாம். "கண்ணுதற் கடவுள் அண்ணலங் குறுமுனி முனைவேல் முருகன் எனவிவர் முதலிய திருந்துமொழிப் புலவர் அருந்தமிழ் ஆய்ந்த சங்கம் என்னும் துங்கமலி கடலுள் அரிதின் எழுந்த பரிபாட் டமுதம் அரசுகிலை திரீஇய அளப்பருங் காலம் கோதில் சொன் மகள் நோதகக் கிடத்தலின் பாடிய சான்றவர் பீடுகன் குணர மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின் தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் எழுதினர் பிழைப்பும் எழுத்துரு வொக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்