பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/413

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆசிரிய மாலை 389 கடற்சூழ் அரணம் போன்ற துடல்சின வேந்தன் முற்றிய ஆரே.” என வரும்”. ஈண்டு உரையாசிரியர் பாடலுக்குரிய நூற்பெயரைத் தரவில்லை. இப் பாடல் ஆசிரியமாலையைச் சேர்ந்தது என்பது புறத்திரட்டின் வாயிலாகத் தெரிய வந்தது. இவ்வாறு இன்னும் பல ஆசிரியமாலைப்பாடல்கள் பல்வேறுஉரைகளிலும் வந்திருக்கலாம்; நூற்பெயர் குறிப்பிடப்படாமையால் அவை அறியப்படாமல் இருக்கலாம். புறத்திரட்டில் பதினாறு பாடல் கள் மட்டுந்தாமே தொகுக்கப் பெற்றுள்ளன! அதில் வராத பாடல்கள் வேறு உரை நூல்களில் வந்திருந்தால் கண்டு பிடிக்க முடியாதல்லவா? தொல்காப்பிய உரையாசிரியர்கள் நூற்பெயர் குறிப்பிடா மல் ஆசிரிய மாலைப் பாடல்களை எடுத்துக்காட்டியிருப்பி னும், சிலப்பதிகாரத்தின் பழைய அரும்பத உரையாசிரியர். நூற்பெயருடன் ஆசிரிய மாலைப் பாடல் பகுதியொன்றினை எடுத்துக் காட்டியுள்ளார். சிலப்பதிகாரம்-வேனிற் காதையில் உள்ள, - 'ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தி கன்பா லமைந்த விருக்கைய ளாகி'என்னும் (அடி:2526) பகுதிக்கு அரும்பதவுரையாசிரியர் வரைந் துள்ள உரைப்பகுதி வருமாறு: 'ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தியாவது, இரு பத்தொரு கோவை முதலாக நானுாாறு கோவை யீறாகக் கிடந்த கோவைகளுள் ஒன்பான் கோவையில் மேற்செம்பாலை தாரமுத லென்பது, "தலையின தாரஞ் செய்யுந் தாரம்' என்பதனாற் பெற்றாம். ஒன்பான் கோவை; தொண்டு படு திவவின் முண்டக நல்யாழ்' என ஆசிரிய மாலை யுள்ளுங் கண்டு கொள்க’ மேற்காட்டிய உரைப் பகுதியிலிருந்து, 'தொண்டு படுதிவ வின் முண்டக நல்யாழ்' என்பது, ஆசிரிய மாலைப் பாட லொன்றின் பகுதி என்பது புலனாகிறது. தொண்டு என்றால்