பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/452

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


430 தமிழ் நூல் தொகுப்புக் கலை 'ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை ...வேரறியாமல் விளம்புகின் றேனே"- (95) என்பது, பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்” என் னும் சிவ புராணப் பகுதிபோன்ற அவையடக்கப் பகுதியாகும். கடவுள் வணக்கப் பாடல்கள். முன்னமேயே கூறப்பட்டுள்ளன. 'மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவனை கண்ணுவ ரன்றே" (99) இப்பாடலில் உள்ள மூவாயிரம் தமிழ் என்பது நூலின் பெயர்; ஓதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவர்' என்பது நூல்பயன். மூவாயிரம் தமிழ் என்னும் பெயர் சிலரால் தமிழ் மூவாயிரம் என்றும் குறிப்பிடப்படுகிறது. '..தமிழ் மூவாயிரம் சாத்தி, மன்னிய மூவாயிரத் தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து' (3595) என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் தமிழ் மூவாயிரம்’ என்று குறிப்பிட்டிருப்பது காணலாம். மூவாயிரம் தமிழ் என்னும் பெயர் பின்னர்த் திருமந்திரம் என மாறியது போல், சிவபுராணம் என்னும் பெயர் பின்னர்த் திருவாசகம் ஆயிற்று. இவ்வாறே, கம்பரால் இடப்பட்ட 'இராமாவதாரம்’ என்னும் பெயர் பின்னர் இராமாயணம் ஆயிற்று. சேக்கிழாரால் இடப் பெற்ற திருத் தொண்டர் புராணம்’ என்னும் பெயர் பின்னர்ப் பெரிய புராணம் ஆயிற்று' இவ்வாறே சிவ புராணம் பின்னர்த் திருவாசகம் ஆயிற்று. - திருவாசகம் சிறிய நூல் ஆதலின் இதற்குச் சிவ புராணம்' என்னும் புராணப் பெயர் பொருந்துமா எனச் சிலர் வினவ லாம். ‘சிவ புராணம்' என்னும் மிகச் சிறிய முதல் பகுதிக்குச் சிவபுராணம் என்னும் பெயரை யாரோ சூட்டியிருக்கும்போது, நூல் முழுதும் சிவபுராணம் எனப்படல் கூடாதா? எல்லாத் தலைப்புகளின் கீழும் விளக்கம் எழுதியிருப்பது போல் சிவபுராணம் என்னும் தலைப்பின்கீழும் சிவனது