பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/588

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


566 தமிழ்நூல் தொகுப்புக் கலை தமிழியக்கம் வெளியீடு: முல்லைப் பதிப்பகம், சென்னை-மதுரை. அச்சு கமர்சியல் பிரின்டிங் & பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை. நெஞ்சு பதைக்கும் நிலை முதல் மற்றும் பலர் வரை 24 தலைப்புகள் P - GIT, இந்த நூல் இரண்டு வெளியீட்டாளர்களால் வெளியிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. குடும்ப விளக்கு-முதல் பகுதி முதல் பதிப்பு வெளியிட்டவர்: பாலசுப்பிரமணியம், பாரத சக்தி நிலையம், புதுச்சேரி. 14- ஆம் பதிப்பு: 1955. விநோதன் பிரஸ், சென்னை-1. விற்பனை உரிமை: பாரி நிலையம், இதில் குடும்பப் பண்பு விளக்கப்படுகிறது. நல்ல ஒரு குடும்பத்தின் ஒரு நாள் நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. குடும்ப விளக்கு-இரண்டாம் பகுதி வெளியீடு: செந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம். விற் பனை உரிமை: பாரி நிலையம், சென்னை. அச்சு: மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை, முதல் பதிப்பு 1944; ஆறாம் பதிப்பு:1953. இது விருந்தோம்பல் பற்றியதாகும். விருந் தோம்பும் முறை, இல்லத் தலைவரின் இளமை நினைவுகள், எதிர்காலத் தலைவரின் காதல், மற்றும் வாழ்க்கை பற்றியவை கூறப்பட்டுள்ளன. * , குடும்ப விளக்கு - மூன்றாம் பகுதி வெளியீடு: பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி. விற்பனை உரிமை- மலர் நிலையம், சென்னை-1. முதல் பதிப்பு நாள்: 1 - 12 - 1948. ஆறாம் பதிப்பு 1955. இப்பகுதி திருமணம் பற்றியது. வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு’ என்னும் தலைப்பு முதல் இன்பத்துறை என்னும் தலைப்பு ஈறாக 12 பிரிவுகளில் திருமணம் தொடர்பான செய்திகள் சுவையாகத் தரப்பட்டுள்ளன.