பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 64: பல பாடல் திரட்டு தொ-மக்தூம் முகமதுப் புலவர். சித்தாந்தசைவப் பிரகாச பிரஸ், சென்னை. 1873, இசுலாமியப் புலவர் பலர் பாடிய பக்திப் பாடல்களின் தொகுப்பு. சப்த தலத் தேவாரத் திரட்டு சப்த தலம் என்றால் ஏழு ஊர்கள் என்பதாம். திருவையாறு, திருப்பழனம்,திருவேதிகுடி, திருச்சோற்றுத்துறை. திருக் கண்டியூர், திருப்பூந் துருத்தி, திருநெய்த்தானம் என்னும் ஏழு ஊர்கள், காவிரி ஆற்றையும் அதன் கிளையாகிய குடமுருட்டி ஆற்றையும் சார்ந்துள்ளன. அடுத்தடுத்துப் பக்கத்தில் உள்ள இந்த ஏழு ஊர்ச் சிவன் திருமேனிகளையும் திருவையாற்றுக் காவிரிக்கரைக்குக் கொண்டு வந்து திருவிழா நடத்துவர். இது மிகப் பெரிய விழாவாகும். இந்த ஊர்கள் : தமிழில் ஏழுர் என்றும், வட மொழியில் சப்தஸ்தலம் - சப்த ஸ்தானம் என்றும் வழங்கப் பெறும். இவ்வூர்களின் மீது பாடப்பெற்ற தேவாரப் பாக்களும்வேறு பல பாக்களும் இத் திரட்டில் உள்ளன. இறுதியில் வீரபத்திரப் பிள்ளை நாமாவளிக் கீர்த்தனைகள் உள்ளன. தொ. தஞ்சை பள்ளி அக்கிரகாரம் பி.ஏ. நீலமேகம் பிள்ளை. தராசு அச்சுக் கூடம், தஞ்சை. 1915. குறுந் திரட்டு ஆசிரியர் : தத்துவராய சுவாமிகள். தொகுப்பு: அ. இராம சாமிச் சுவாமிகள். மிமொரியல் அச்சு இயந்திர சாலை, சென்னை - 1888 ஆம் ஆண்டு. உள்ளுறை: பொழிப்பு முதல் வாழ்த்து ஈறாக உள்ள 229 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. குன்றக்குடி குமரன் கீர்த்தனை R50.34. எண் ஒலைச் சுவடி. குன்றக் குடி குமரன் மீது நாடோறும் ஒவ்வொரு பாடல் வீதம் பாடிய பாக்களின் தொகுப்பு இது. சில பாடல்களில் இராகங்கள் குறிக்கப்பட்டுள் ளன. தினகவிதை நூல் பாடிய ஆசிரியரே இந்நூலையும் பாடி யிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.