பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 தமிழ் நூல் தொகுப்புக் கலை உரிமையுரைப் பாடல் ஒன்று வருமாறு:-இந்தப்பாடல், கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) என்பவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள கருத்தாவது:-லெய்ஸ் (Lais)என் னும் அரசவை யணங்கு, தன் முகம் பார்க்கும் கண்ணாடியை அஃபிரோதித் (Aphrodite) என்னும் பேர்வழிக்கு உரிமை யாக்கித் தந்துவிட்டாள்-இந்தக் கருத்தமைந்த பாடலே அது! ஏழாவது நூல், கல்லறைக் கல்வெட்டுப் பாடல்களின் தொகுப்பாகும்.அஃதாவது, இறந்து போனவர்கள் மேல் பாடிய இரங்கற் பாக்களின்-இரங்கல் உரையின் தொகுப்பாயிருக்க லாம். எடுத்தக் காட்டாக ஒர் இரங்கல் வருமாறு:- தெர் மோபிலே’ (Thermopylae) என்னும் இடத்தில் இறந்துபோன "ஸ்பார்ட்டன்’ (Spartan) என்பவர் மீது, சிமோனிதெஸ் (Simonides of ceos)என்னும் பாவலர் பாடிய இரங்கற்பாக்கள் இங்கே குறிப்பிடத்தக்கன. இந்தப்பாக்களும், இவ்வாறு பலர் மீது பலர் பாடிய இரங்கற்பாக்களும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இத்தகு இரங்கற் பாக்கள் தமிழில் நிரம்ப உண்டு. இது பற்றிப் பின்னர்ப் பேசுவோம். எட்டாவது நூலில், கி.பி. நான்காம் நூற்றாண்டில் அரு orml: G. Lysis, ‘ārāfi' (St. Gregore of Nazianzus) argårgyth போப்பாண்டவரைப் பற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள் (GTGBT, ஒன்பதாவது நூலில், எண்ணுறுக்கு மேற்பட்ட பல்வேறு வகையான வெளித் தோற்றப் பாடல்கள் (Epideictic ephigrams) இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்களுள், கவின் விளக்கப் (வருணனைப்) பாடல்களும் உள; உயிரற்ற அஃறிணைப் பொருள்களைப் பற்றிய உரைகளும் உள; கல்வெட்டுப் பகுதி களும் உள. - பத்தாவது நூலாக, அறிவுரைப் பாடல்களும் பொதுநீதி விளக்கப் பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. பதினோராவது தொகை நூலாக, உண்டி - குடிவகைப் பாடல்களும், வசைப் பாடல்களும், வஞ்சப் புகழ்ச்சிப் பாடல் களும் திரட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன.