பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் - 685 ஐம்பதிற்கும் மேற்பட்ட பல சிறு நூல்களின் தொகுப்பு. வடிவில் பெரிய குள்ளக்கட்டை. வெற்றி நகரம் அன்னபூரணி அம்மாள் அட்டப்பிரபந்தம் ஆ-கல்லல் மணிவாசக சரணாலய சுவாமிகள். திருச்சி டாட்சன் அச்சகம். 1926. உ.கும்மி, மாலை, போற்றிக் கலிவெண்பா, அடிமடக்கு அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம், ஒருபா ஒரு பஃது, இருபா இருபஃது, முப்பா முப்பஃது, நாற்பா நாற்பஃது ஆகிய எட்டு நூல்களின் திரட்டு. கெளசிக சிந்தாமணி-மூன்று பாகங்கள் ஆய்வு அநுப்பா பாளையம் அ.இ.ரா. முருகைய சோதிடர். உத்தரவு-டி.ஜி.ஜானகிராம் நாயகர். பதிப்பு - பி.இரத்தின நாயகர் அண்டு சன்ஸ். அச்சு.கோல்டன் எலெக் டிரிக் பிரஸ், சென்னை, முதல்பாகமும் இரண்டாம் பாகமும் 1924. மூன்றாம் பாகம் 1929. - சப்தரிஷிகளுள் மகா மகத்துவம் பொருந்தியவராகிய கெளசிக மகாரிஷி அருளியது. முதல் பாகம்-இதில் தொடக்கத்தில் விசுவாமித்திர சிந்தா மணி - சாதக கிரகப் பலன்கள்’ என்பது உள்ளது. இது 34 பாடல்கள் கொண்டது. பின்பு, 387 பாடல்கள் கொண்ட கெளசிக சிந்தாமணி உள்ளது. மூன்றாவதாக- கெளசிக சிந்தா மணியுடன் சேரு-துலாலக்கின பலன்-கடக ராசி பலன் ஆகிய -129 பாடல்கள் கொண்ட தொகுப்பு உள்ளது. இரண்டாம் பாகம் - விசுவாமித்திரருக்கும் வசிட்டருக் கும் தர்க்க சோதிடம் என்னும் கெளசிக சிந்தாமணி’ என்பது உள்ளது. இது ஆயிரம் பாக்கள் கொண்டது. பல உள்தலைப்பு கள்-சோதிடம் பற்றிய பல செய்திகள் உள்ளன. மூன்றாம் பாகம்-வசிட்ட விசுவாமித்திரர்’ சம்வாதமாகிய தர்க்க சோதிடம் என்னும் கெளசிக சிந்தாமணி' என முதலில் பெயர் உள்ளது. இது 431 பாடல்கள் கொண்டது. சோதிடம் பற்றிய பல செய்திகள் உள்ளன. இந்நூல் அரிய பெரிய தொகுப்பாகும்.