பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/794

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. நூல் பெயர் அகரவரிசை இந்தப் பகுதியில், இந்நூலில் விவரம் தரப்பெற்றுள்ள நூல் களின் பெயர்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. அ,இ,க,ச,த,தி,ப முதலிய சில எழுத்துகளில் தொடங்கும் பெயர்கள் மிகுதியாய் இருப்பதால், அவற்றிற்கு முதல் எழுத் தளவு மட்டிலுமே அகர வரிசை அமைத்துத் தரப்பட்டுள்ளது. இவை தவிர்த்த வேறு பல எழுத்துக்ளில் தொடங்கும் பெயர்கள் ஓரளவு குறைவாயிருப்பதால், மிக்க முயற்சியின்றி அவற்றிற்கு, முதல் எழுத்து தொடங்கி இறுதி எழுத்துவரையும் அகர வரிசை கவனிக்கப்பட்டு அமைத்துத் தரப்பெற்றுள்ளது. மிகுதியாயுள்ள பெயர்கட்கு அகரவரிசை அமைக்க முயன் றால், மூளைக் கட்டிப் பிணியோடு ஒரளவு அகவை முதிர்ந்த எனக்குத் தலையை வலிக்கிறது. எனக்கு வேறு துணையில்லை; யானே எல்லாம் செய்கிறேன். இக்குறையைப் பொறுத்தருள வேண்டுகிறேன். சில நூல்கள் ஒன்றுக்குமேல் பல பதிப்புகள் பெற்றுள்ளன. அமைப்பில் வேறு வேறான நூல்கள் சில, ஒரே பெயர் பெற்றுள்ளன. இந்நூல் பெயர்களின் பின்னால் (2), (3) . என அடைப்புக் குறிப்புகள் இட்டுப் பதிப்பு எண்ணிக்கை தரப் பட்டுள்ளது. ஒரே பெயராயுள்ளனவற்றின் பின்னால் ஆசிரியர் பெயரோ வேறு அடையாளமோ தந்து வேறுவேறு நூல்கள் என்பது அறிவிக்கப்பட் டுள்ளது. 'எஞ்சிய தொகை நூல்கள் என்னும் பகுதியில் உள்ள - விவரம் தரப்படாத சில நூற்பெயர்கட்கு அகரவரிசை தரப் படவில்லை. அண்மையில் அறியவந்த சில தொகை நூல்களின் பெயர்கள், பின்னுள்ள அட்டவணையின் இடையிடையே புகுத் தப்பட்டுள்ளன. அவற்றிற்குப் பக்க எண்கள் இரா.