பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நூல் தொகுப்புக் கலை முதல் பெருங்கலை : முதல்முதல் குழந்தைக்குத் தாயின் வாயிலாகவே மொழி அறிமுகமாகிறது. அதனுல்தான், அந்தக் குழந்தை பின்னர்ப் பேசும் மொழி தாய்மொழி எனப்படுகிறது. சேய் தாயிட மிருந்து முதலில் பெற்றுச் சுவைக்கும் மொழிச் செல்வம் சொற்களோ சொற்ருெடர்களோ அல்ல; அந்தச் செல்வம் பாட்டு - பாட்டு - பாட்டே தான்! சொற்களையும் சொற் ருெடர்களையும் குழந்தையின் மேல் அள்ளிப் பொழிந்து தாய் கொஞ்சுவாள்; ஆனால் குழந்தைக்கு ஒன்றும் புரியாது. கொஞ்சும் தாய்க்குச் செய்யும் பதில் உதவியாக-கைம் மாருகக் குழந்தை புன்சிரிப்புப் பூக்கும்-அவ்வளவுதான் ! தாய் பாட்டுப் பாடினலோ, குழந்தை அதில் சொக்கிப் போகும். தொட்டிலை ஆட்டிக்கொண்டே தாய் பாடும் தாலாட்டுப் பாடலைச் சுவைக்காத சேயும் உண்டோ? தாலாட் டுப் பாடாமல் அன்னை தொட்டிலே ஆட்டினல், குழந்தை உளம்-ஊம்" என்று ஒலியெழுப்பும். அந்த ஒலிக்குப் பொருள் பாட்டுப் பாடு' என்று அன்னைக்கு இடும் ஆணையாகும். அன்னே இடையிலே பாடலை நிறுத்திலுைம், ப. டுைம் உளம்-ஊம்' என்ற கட்டளே யெழும். அந்த அளவுக்குத் தாயின் தாலாட்டுப் பாடலைக் குழந் ைத சுவைக் கிறது. ஆம்! மக்களினம் முதலில் அறிந்து சுவைக்கும் கலை 'பாடல் கலை தான்! முதல் பெருங்கலை கவிதைக் கலையே! தனிமை மொழி : குழந்தை முதலில் பேசும் மொழி, சொற்களோ சொற் ருெடர்களோ அல்ல. இவை குழந்தைக்கு முதலில் தெரி வதற்கில்லே. குழந்தை முதலில் பேசும் மொழி பாட்டுத் தான். தனித்துப் படுத்துக் கொண்டிருக்கும் போது குழந்தை ஏதோ ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும்; அந்த ஒலி