பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தமிழ் நூல் தொகுப்புக் கை துள்ளார். இந்த முன் - பின் குழ்நிலையை வைத்துக் கணித்துப் பார்க்குங்கால், நூற்பெயர் குநிப்பிடாமல் அரும்பத வுரையாசிரியரால் எடுத்துக் காட்டப்பெற்றுள்ளமேலுள்ள எட்டு நூற்பாக்களும், பதிறுை படலததுள ஒரு படலத்தை, அல்லது ஒரு படல ஒத்தைச் డ్రైt 56 మిurఆGఎ இருக்கும் எனக் கருதலாம். இசைத் தமிழ் இலக்கணத்தை இவ்வளவு விளக்கமாகச் சொல்லும் பதினறு படலம் நமக்குக் கிடைக்காமற் போனது தீப் பேறே. ~ இல்வாருக, பன்னிரு படலமும் பதினறு படலமும் போல, இன்னும் எந்தெந்தத் துறைகளையோ Gltäಹ எத்தனையோ தொகைநூல்கள் இடைச்சங்க காலத்திலும், அதனையொட்டிய காலத்திலும் இருந்திருக்கக் கூடும். 5. கடைச் சங்க காலம் இப்பொழுது சங்க இலக்கியங்கள் என்னும் பெயரில், மேற்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களும், கீழ்க் கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களும், முத்தொள்ளா யிரம் முதலிய சில நூல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை, பொதுவாகச் சங்க இலக்கியங்கள் எனப்படினும், கடைச்சங்க கால இலக்கியங்களே. கடைச்சங்க இலக் கியங்களுள் தொகை நூல்களாக உள்ளனவற்றைப் பற்றி ஆராய்வோம். 11. பதினெண் மேற்கணக்கு பதினெண் மேற்கணக்கு என்னும் பெயர், பதினெட்டு நூல்களைக் குறிக்கும் ஒரு தொகைப் பெயராகும். இந்தப் பெயருக்குள் பதினெட்டு நூல்கள் அடங்கியுள்ளன. கனக்கு” என்ருல், 'நூல்" என்று பொருளாம். அடியளவால் மேலான (பெரிய) பாடல்களையுடைய பதினெட்டு நூல்கள் பதினெண் மேற்கணக்கு எனப்பட்டன. அடியளவால் கீழான (சிறிய) பாடல்களையுடைய பதினெட்டுக் கீழ்க் கணக்கினின்றும் வேறு பிரித்துக் காட்டுவதற்காக, இவை பதினெண் மேற் கணக்கு எனப்பட்டன. பத்துப் பாட்டு எனப்படும் பத்து நூல்களும், எட்டுத் தொகை எனப்படும் எட்டு நூல்களும் ஆகிய பதினெட்டு நூல்களும், பதினெண் மேற் கணக்கு எனப்படும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்ற முறையில், பன்னிரு பாட்டியல் என்னும் செய்யுள் இலக்கண நூலில், மேற்கணக்கு கீழ்கணக்கு என்பவற்றிற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. இதனைப் பன்னிரு பாட்டியல்இனவியலில் உள்ள, மேல்கீழ்க் கணக்கென இருவகைக் கணக்கே. ’ மேற்கணக் கெனவும் கீழ்க்கணக் கெனவும் பாற்படு வகையால் பகர்ந்தனர் கொளைே."