பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 தமிழ் நூல் தொகுப்புக் க ை வந்த நச்சினர்க்கினியர், 'எரியள்ளு வன்ன நிறத்தன்' என்று. தொடங்கும் இந்தப் பாடல் முழுவதையும் தந்து, இப் பாடலின் கீழே, 'இது கடவுள் வாழ்த்து, தொகைகளிலும் கீழ்க் கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம். இதன்கண் அடங்கும்- - என வரைந்துள்ளார். கடவுள் வாழ்த்துக்கு எடுத்துக் காட்டாகத் தொகை நூல்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களேயே விதந்து குறிப்பிட் டுள்ள நச்சினர்க்கினியரால் காட்டப்பட்டுள்ள எரியள்ளு வன்ன நிறத்தன்' என்னும் கடவுள் வாழ்த்துப் பாடலும், ஏதேனும் ஒரு தொகைநூலைச் சேர்ந்த பாடலாகத்தானே இருக்கக் கூடும்? தொகை நூல்களுள் பதிற்றுப்பத்தில் தவிர மற்றவற்றில் எல்லாம் கடவுள் வாழ்த்துப் பாடல் இருப் :தால், இந்தப் பாடல் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலாகத்தானே இருக்கக் கூடும்? பதிற்றுப்பத்தின் பதிகப் பாடலை முதற்கொண்டு எடுத்தாளும் நச்சினர்க்கினியர், அந் நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலை எடுத்தாண் டிருப்பதில் வியப்பேது மில்லை. 'இது பதிற்றுப்பத்தின் கடவுள்வாழ்த்துப் பாடலெனில், இப் பாடலின் கீழே பதிற்றுப் பத்து' என நூலின் பெயரை நச்சிஞர்க்கினியர் குறிப்பிட்டிருப்பாரே? -எனச் சிலர் வினவலாம். நூற்பெயரைக் குறிப்பிடும் வழக்கம் அவரிடம் மிகவும் உண்டெனினும், சில இடங்களில் அவர் குறிப்பிடா மலேயே சென்றுள்ளார். மற்றும், இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல், பதிற்றுப் பத்தைச் சேர்ந்த நூறு பாட்டுக்களுள் ஒன்றன்று ஆதலானும், தனியாக வேருெருவரால் இயற்றிச் சேர்க்கப்பட்ட தாதலானும், இந்தப் பாடலைப் "பதிற்றுப் பத்து’ என்னும் நூற்பெயரால் குறிப்பிடாது விட்டார் போலும்! எனவே, நச்சினுர்க்கினியர் வரைந்துள்ள உரைப் பகுதியின் சூழ்நிலையை நன்கு ஆராய்வார்க்கு, இப் பாடன் பதிற்றுப் பத்து 331; பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்தே என்பது விளங்காமற். போகாது. பாடலையே பனிமூட்டம் சூழ்ந்துள்ளபோது, அதன் ஆசிரியர் பெயரை எவ்வாறு அறிவது? இந்தப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனர் தலையில் கட்டி விடலாமா? ஏன் செய்யக் கூடாது? இதற்குமுன் பேசப்பட்டுள்ள ஐந்து. தொகை நூல்களின் முன்னல் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பாரதம் பாடிய பெருந்தேவனரால் பாடப்பட் டிருக்கும்போது, ஆருவது தொகை நூலாகிய பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் மட்டும் ஏன் இவருடைய தாக இருக்க முடியாது? இவரால் பாடப்பட்டனவாகிய *&xrrrrgýðrf? கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன்" என்று தொடங்கும் அகநானுாற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலையும், 'கண்ணி கார் நறுங் கொன்றை கார்வண்ண மார்பின் தாரும் கொன்றை என்று தொடங்கும் புறநானுாற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலையும் ஊன்றி நோக்கி, அவற்றின் அமைப்பினை ஆராய்ந்து காணின், பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கருதப்படும் ‘எரியெள்ளு வன்ன நிறத்தன், விரியினர்க் கொன்றையம். பைந்தார் அகலத்தன்' என்று தொடங்கும் பாடலும்: பாரதம் பாடிய பெருந்தேவன ருடையதாகவே இருக்கக் கூடும் என்பது புரியாமற் போகாது. - பதிற்றுப் பத்தின் இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பற்றி ஒரு தடை எழுப்பப்பட்டுள்ளது. பதிற்றுப் ப்த்து உட்பட இதுவரை பேசப்பட்டு வந்துள்ள ஆறு தொகை நூல்களும் ஆசிரியப் பாவால் ஆனவை: முதல் ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துக்களும் பெருந்தேவனுரால் ஆசிரியப் பாவாலேயே இயற்றப்பட்டுள்ளன. ஆனால், பதிற்றுப் பத்துக் கடவுள் வாழ்த்தாகக் கருதப்படும் ‘எரியெள்ளு வன்ன நிறத்தன்” என்னும் பாடல், வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்த மருட்டா வாகும். எனவே, ஆசிரியப்பாவால் ஆன பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தும் ஆசிரியப் பாவாகத்தானே இருக்க வேண்டும்: