பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X 'பெருமை நூலுக்குள் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். இந்தக் கலைக்கு நூல் தொகுப்புக் கலை’ என்னும் அழகிய பெயர் :சூட்டலாம். தமிழ் மொழியில் நூல் தொகுக்கப்பெற்றுள்ள கலைச்சிறப்பை ஆராய்ந்து கூறுவதால், இந்த நூலுக்குத் "தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் பெயர் அளிக்கப் பெற்றது.இந்நூலில், பாடல்களின் தொகுப்பு நூல்கள் தவிர, கட்டுரைத் தொகுப்பு நூல்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள் ளப்படவில்லை. உட்பொருள் : தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் இந்நூல், முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி என இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுதி இரு பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது: “தொகுப்புக் கலை வரலாறு', "முற்காலத் தொகை நூல்கள் என்பன அப் பாகங்களாகும். இரண்டாம் தொகுதி மூன்று பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அப் :பாகங்கள் : இடைக்காலத் தொகை நூல்கள், பிற்காலத் தொகை நூல்கள், இருபதாம் நூற்ருண்டுத் தொகை நூல்கள் என்பனவாகும். முதலில் வெளிவரும் இந்த முதல் தொகுதியின் முதல் பாகத்தில், நூல் தொகுப்புக்கலை வரலாறு' பற்றியும், பொது வாக உலக மொழிகளின் நூல் தொகுப்புக்கலை பற்றியும், சிறப்பாகத் தமிழ் மொழியின் நூல் தொகுப்புக் கலை பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது; இரண்டாம் பாகத்தில், தலைச் சங்க காலத் தொகை நூல்களும், இடைச் சங்க காலத் தொகை நூல்களும், கடைச் சங்க காலத் தொகை நூல்களும் ஆராய்ப்பட்டுள்ளன. இரண்டாம் தொகுதி அடுத்து வெளிவரும். இன்றியமையாத முயற்சி : அடியேன் ஒய்வு நாள்களில் பல ஊர்கட்குச் சென்று - பல நூலகங்கட்குப் போந்து சிற்சிலநாள் தங்கியிருந்து ஆராய்ந்து ஏறக்குறைய இரண்டாயிரம் தமிழ்த் தொகை நூல்களைப் பற்றிய குறிப்புக்களைத் திரட்டியுள்ளேன். யான் சென்று ஆய்ந்த சிறந்த நூலகங்களுள், புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு - இந்திய ஆராய்ச்சிக் கலைக் கழகத்தின் (Institut Francais D'Indologie) Brav sapih ஒன்ருகும். இந்த நிறுவன காலகத்தில் யான் ஒருநாள் ஆய்வு செய்துகொண் டிருந்த போது, இந்த நிறுவனத்தின் தலைவரும், பாரிசுப் பல்கலைக் கழகப் பேராசிரியரும், பன்மொழி-பல்கலைப் புலவரும் உலகத் Alsop 40 milláà loss sp3?ir (International Association of Tamil Research) abouquoth orgau, உயர்திரு டாக்டர் ழான் डू --- - - - - - 令 - - بگو » ه چخم یا خت - daljevitšurrou (Dr. Jean Fiiiiozat) swartassir, @#3 நிறுவனத்தைப் பார்வையிடுவதற்காக அ ன் அ வந்த செர்மானியர் ஒருவரை யான் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தார்கள்; என்னேயும் செர்மானியரையும் ஒருவ்ர்க், கொருவர் அறிமுகம் செய்து வைத்தார்கள் (அந்தச் செர்மானியர் பெயர் நினைவில்லை). பின்னர், அத்தச் செர்மா னியர் சம்சுகிருதத்திலுள்ள தொகை நூல்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வளவுதான் f செர்மானியர் ஒருவர் சம்சுகிருதத் தொகை கால்களைப் பற்றி ஆராய்ந்து பெரிய நூல் வெளி யிடப் போகிருர் என்பதை அறிந்ததும் யான் மிகவும் வியப் படைந்தேன். அங்ங்னமெனில், தமிழகுகிய யான், தமிழ்த். தொகை நூல்களைப் பற்றி ஆய்ந்து நூல் வெளியிட எடுத்தின் கொண்டுள்ள முயற்சி மிகவும் இன்றியமையாதது,ன்ன்,