பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி) 'தமிழ்ப் புலவர் சரித்திரம் - 488 ஆண்டு அவ்வாதீனத்தில் ஞானதேசிகர் பால் அருட்பணி புரிந்துகொண்டு அணுக்கத் தொண்டாாய்ச் சின் னாள் அமர்ந்திருந்தனர். இக்காலத்திற்றான். நமது தேக்கர் தமிழ் கற்குமாறு பன்னீரியாண்டு மயிலேறும் பெருமாள் பிள்ளை பாற் சென்றது, நந்தேசிகர் அவர் மாட்டுத் திராவிடம் பயின் றதோடே நின்றுவிடாமல், திருநெல்வேலி ஜில்லா இராசவல்லி புரத்திற் கடுத்த செப் பறைப்பதிக் கக்கசபாபதி சிவாசாரியாரிடத்துக் கீர்வாண பாஷையும் பயின் றனர், இங்கனம் தாம் பயின்ற கன் றியறிதலை யுலகிற்குத் தெரிவிப்பா னன்றே “் சம்ஸ்கிருத வித்யா குரு வணக்கம்” என்று தீட்டிச்

  • செப்பறைப் பதியின் வாழ்சிவத் துவிசன் காக சபாபதி கருதுவட நரற்கடற் றிபோ தார் புகழுஞ் சைவாதி ராச

அபய பதங்களை யுண்மையொடு பணிவாம், என்று கூறிய தூஉமென்க. இவர் தம் பின்னாட்களில் ஈசான தேசிகர் எனத் தீட்சாநாமப் பூட்சியிற் பொலிந்து திருநெல்வேலி ஆதீனத்தைச் சார்ந்த. ஈசான மடாலயத்தில் இருந்தருளினர். இவர் இருந்த காலம் முன்னே கூறியாங்கு, 18-ஆம் நூற்றாண்டின் ' தொடக்கமேயாம். இதைப்பற்றி மயிலேறும் பெருமாள் பிள்ளை யவர்களது சரித்திரத்தில் வரைந்து 'சுட்டிப்போந்தோம். ஆதலின் இவ்விஷயத்தைக் குறித்து விரித்துரையாது விடுக்கின்றோம், ஏனெனில், கூறியது கூறல் என்னுங் குற்றத்தினின்றும் தவிர்தற் பொருட்டு. இவர் வெகுகாலம் ஜீவித் திருந்ததாகக் கேள்விப்படுகின்றோம். இப்புலவர் புங்கவர் செய்த பிரபந்தங்கள் - இலக்கணக் கொத்துரை" என்பதும் 16 தசகாரியம்” என்பதுமாம். இவ்விருலையு மிவர் இயற்றினா ரென்பதைப்பற்றி ஐயங்கொள்ளக் கிடத்தற்கு இடனில்லை ; ஆகவே யினி யப்பிரபந்தங்களின் குணா குணங்களைப்பற்றிக் கூறப்புகுவாம். முதலாவதாகிய “4 இலக்கணக் கொத்துரை" என்னும் பிரபந்தமானது ஒரு வியாகரண சாஸ்திரம். இஃது பாயிரமுட்பட வேற்றுமையியல், வினை பியல், ஒழிபியல் என்ற நான்கு இயல்களை யுடையது. ஆகவே இது தமி இலக்கணத்தின் ஒரு பகுதியும் அதிக முக்கியமான மாகிய சொல்லதி காரத்தின்பாற் படுகின்றது. இதில் 131 சூத்திரங்களுள, இவற்றுள் ஒவ் வொரு விதியும் அருமையான வியாகரண ரகசியங்களை விளக்கிக் காட்டு கின்றது. இவர் தாங்கற்ற இலக்கண இலக்கியங்களில் இலைமறை காய் போல் மறைந்து கிடந்த அரிய உண்மைகளை யெல்லாம் தமது நுட்ப புத்தி வினா லாசாய்ந்து கூறியிருக்கின் றனர். சூத்திரங்களெல்லாம் வெகு நேர்த்தி யாய் அமைந்திருக்கின் றன்', இவர் " பலர் நூல்களிலும் பலருரைகளினுஞ் > சிதறிக் கிடந்த சில விதிகளை ஒவ்வொரு சூத்திரத்தால் 'ஒருங்கே" 'யாவரும்.