பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தமிழ்ப் பழமொழிகள்


இருந்தால் ஓணம்; இல்லா விட்டால் ஏகாதசி.

இருந்தால் இருப்பீர்; எழுந்தால் நிற்பீர்.

இருந்தால் செட்டி; எழுந்திருந்தால் சேவகன்.

இருந்தால் துவாதசி; இல்லா விட்டால் ஏகாதசி. 3475

இருந்தால் நவாப் சாயபு; இல்லா விட்டால் பக்கிரி சாயபு.

(நவாப் ஷா; பக்கிரி ஷா.):

இருந்தால் பூனை; பாய்ந்தால் புலி.

இருந்து அடித்தேன்; பறந்து போயிற்று.

இருந்து இருந்து இடையனுக்கு வாழ்க்கைப்பட்டாளாம்.

இருந்து இருந்து ஒரு பிள்ளை பெற்றாள், மலமும் ஜலமும் இல்லாமல். 3480

(வலமும், ஜலமும்.)

இருந்து இருந்து ஒரு பெண்ணைக் கொண்டான்; மலஜலம் எல்லாம் வீட்டுக்குள்ளே.

இருந்து இருந்து பார், இடி விழுவான் காரியத்தை.

இருந்து கொடுத்தால் நடந்து வாங்கு.

(வாங்க வேணும்.)

இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்க வேண்டியதாய் இருக்கிறது.

(கடன் கொடுத்து.)

இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான். 3485

(கெடுத்தான் பாவி, கெடுத்தான் முருகப்பன்.)

இரு நாய்க்கு இட்ட எலும்பு போல.

இருப்பது எல்லாம் இருந்துவிட்டு இளித்த வாயன் ஆவானேன்?

இருப்பது பொய்; போவது மெய்.

இருப்பவனுக்கும் கேளாதவனுக்கும் கொடுக்காதே.

இருப்பிடம் தலைப்பிள்ளை; தலைக்கடை தென்னம் பிள்ளை. 3490

இரும்புக்கட்டியைக் காற்று அடித்தபோது இலவம் பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.

இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுப்பதா?

இரும்பு கோணினால் ஆனையை வெல்லலாம்; கரும்பு கோணினால் சுட்டியும் பாகும் ஆகும்.