பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தமிழ்ப் பழமொழிகள்


இருளன் பிள்ளைக்கு எலி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?

இருளன் ராஜவிழி விழிப்பானா?

இருளுட் ஒரு காலம்; நிலவும் ஒரு காலம்.

இரை விழுங்கின பாம்பு போல.

இல்லது வாராது; உள்ளது போகாது. 3520

இல்லறம் அல்லது நல்லறம் அன்று.

இல்லறம் நல்லறம்.

இல்லறம் பெரிது; துறவறம் சிறிது.

(துறவறம் பழிப்பு.)

இல்லாத சொல் அல்லல்படும்.

இல்லாததைக் கொண்டு கல்லாததைக் கனா என்றால் யாரால் முடியும்? 3525

இல்லாத பிள்ளைக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.

இல்லாதவன் கோபம் பொல்லாதது.

இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழி.

(மைத்துனி, யாழ்ப்பாண வழக்கு.)

இல்லாதவன் பொல்லாதவன்.

இல்லாதவன் வீட்டில் இருபத்தேழு குழந்தைகள். 3530

இல்லாதவனுக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.

இல்லாதவனோ, பொல்லாதவனோ?

இல்லாத வீட்டுக்கு இலஞ்சியம்.

இல்லாது சொல்லி அல்லற்படுதல்.

இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது. 3535

இல்லாது இல்லன்; இருப்பதும் இல்லன்.

இல்லார் இருமையும் நல்லது எய்தான்.

இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?

இல்லிடம் இல்லார்க்கு நல்லிடம் இல்லை.

இல்லு அலுக்கானே பண்டுக வச்சுனா. 3540

(தெலுங்கு, வீட்டை மெழுகிவிட்டால் பண்டிகை வந்துவிடுமா என்பது பொருள்.)

இல்லை என்கிற மகராசி இல்லை என்றாள்; தினம் போடுகிற மூதேவிக்கு என்ன வந்தது?

இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது.

(இல்லை என்ற இடத்தில்.)