பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

147


குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற் போல்.

குருத் துரோகம் குல நாசம்.

குரு நின்ற நிலையில் நின்றால் சீடன் ஒடுகிற ஓட்டத்தில் இருக்கிறான். 8965


குரு நின்று கொண்டு பெய்தால் சிஷ்யன் ஓடிக் கொண்டு பெய்வான்.

குரு பார்வையால் கோடிப் பாவம் விலகும்.

குரு மொழிக்கு இரண்டு உண்டா?

குரு மொழிக்குச் குறுக்கே போகலாமா?

குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தை கேளாதவனும் சண்டி, 8970


குரு மொழி மறந்தோன் திரு அழிந்து அழிவான்.

குரு வாய் மொழியே திருவாய் மொழி.

குருவி உட்காரப் பனம் பழம் விழ.

குருவிக்கு ஏற்ற ராகசுரம்.

(யாழ்ப்பாண வழக்கு. குருவி வாய்க்குள் வைக்கும் நாகசுரத்தின் உறுப்பு சக்கை என்பர்.)

குருவிக்குத் தகுந்த ராமேசுரம். 8975

(ராமேசுவரம்.)


குருவிக்குத் தகுந்த பாரம்.

குருவிக்குப் பல நாளைய வேலை; குரங்குக்கு ஒரு நாழிகை வேலை.

குருவிக் கூட்டைக் குலையக் கலைக்காதே.

குருவிக் கூட்டைக் கோலாலே கலைக்காதே.

(கலைக்கிறது.)

குருவி கழுத்தில் பனங்காயைக் கட்டித் தொங்கவிட்டது போல. 8980

(கட்டித் தூக்கலாமா?)


குருவி சிறுகச் சிறுகத் தனக்குக் கூட்டைக் கட்டுகிறது.

குருவி சொல்லும் மருவிக் கேள்.

குருவி தலையில் பனங்காயை வைத்தாற் போல.

(தேங்காயை.)

குருவி போலக் கூடு கட்டிக் குரங்கு போலப் பிய்த்தெறிவான்.

குருவி போல மூக்காலே சேர்த்தானாம். 8985