பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

155



குறும்பை பூத்தாலும் குணம் போமா நெருப்புக்கு?

(குறுமை.)

குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.

குறை உள்ளார்க்கு உண்டு குறுகுதல்; கறை உள்ளார்க்கு உண்டு கரவு.

குறைக் கேழ்வரகு அரைக்கவா?

குறை குடம் கூத்தாடும். 9160


குறை குடம் தளும்பும்; நிறை குடம் தளும்பாது.

குறைந்த கருமான், நீண்ட தச்சன்.

குறைந்த வயிற்றுக்குக் கொள்ளும் பலாக் காயும்; நிறைந்த வயிற்றுக்கு நீர்மோரும் பானகமும்.

(ததியோதனமும்.)

குறையச் சொல்லி நிறைய அள.

(நிறையக்கொடு.)

குறையை நினைத்துக் கோயிலுக்குப் போகக் குறை வந்து கொண்டையிலே ஏறிற்றாம். 9165


குறை வித்தையைக் குருவுக்குக் காட்டுகிறதா?

குறைவு அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.

குறை வேலையை அம்பலத்தில் கொண்டு வரலாமா?

குறை வேலையைக் குருக்களுக்குக் காட்டாதே.

(குருக்களுக்கும் காட்டலாகாது.)

குறை வேலையை முடியாமல் அம்பலத்துக்கு வரலாமா? 9170


குன்றக்குடித் தேவடியாளுக்கு நின்றாற் போலப் பயணம் வரும்.

குன்றி மணி இல்லாத் தட்டான் குசுவுக்குச் சமானம்.

(குசுக் கூடப் பெறமாட்டான்.)

குன்றி மணிக்குக் குறுக்கே கறுப்பு.

குன்றி மணிக்கும் பின்புறத்தில் கறுப்பு.

குன்றி மணித் தங்கம் இல்லாவிட்டால் கொஞ்சங்கூடத் தட்டான் பிழைக்கமாட்டான். 9175


குன்றி மணி குப்பையில் கிடந்தாலும் குன்றுமா நிறம்?

குன்றி மணிப் பொன் பூட்டிக் கொள்ளக் கோடி தவம் செய்ய வேணும்.

(பொன் கிடைக்க.)