பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கூ

கூ என்றவன் பேரில் கொல்லச் சினம். 9185


கூகைக்குப் பகலில் கண் தெரியாது.

கூகை விழித்தாற்போல் விழிக்கிறான்.

கூச் கூச் என்றால் நாய் மூஞ்சியை நக்குமாம்.

கூட்டத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல.

கூட்டம் பெருத்தால் குசுப் பெருக்கும். 9190


கூட்டு வியாபாரம் குடுமிப் பிடி.

கூட்டோடு கயிலாயம் சேர்ந்தாள் காரைக்கால் அம்மை.

கூட்டோடு போச்சுது குளிரும் காய்ச்சலும்.

கூட இருந்து கொண்டு கொள்ளியைச் செருகலாமா?

கூட இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப் பார். 9195


கூடிக் குடியிருந்து கொண்டு கொள்ளி சொருகலாமா?

கூடத்தைக் கொடுத்தாலும் மாடத்தைக் கொடுத்தல் ஆகாது.

(கெடுத்தல்.)

கூடப் பிறந்தவனைக் கோள் சொல்லிக் கொல்லுகிறதா?

கூடம் ஒன்று போடும் முன்னே சுத்தி இரண்டு போடும். கூடம் இடிந்தால் மாடம். 9200


கூடி இருந்து குலாவுவார் வீட்டில் ஓடி உண்ணும் கூழும் இனிது.

கூடி இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப் பார்.

கூடி எல்லோரும் தூக்கி விடுங்கள்; பிணக்காடாய் வெட்டிக் குவித்துப் போடுகிறேன் என்றான்.

கூடி வருகிற காலத்தில் குடுமி நட்டமா நிற்குமாம்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, 9205

(வாழ்வது.)