பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

193


கோபம் பெரும் பாவம்.

கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் சந்தோஷம் வந்தால் எழுந்திருக்கலாமா?

கோபமும் தாபமும் கூடிக் கெடுக்கும். 9965


கோபமும் நெருப்பும் உடனே கெடு.

கோபிக்காத புருஷன் புருஷன் அல்ல; கொதிக்காத சோறு சோறு அல்ல.

கோபி குதிரைமேல் கடிவாளம் இல்லான்.

கோபுரத்தில் ஏறிப் பொன்தகடு திருடு என்ற கதை.

கோபுரத்தில் ஏறி விழுந்தவனுக்கு எங்கே கண்டு இழை இடுகிறது? 9970


கோபுரத்தில் கட்டிய கொடி போல.

கோபுரத்தில் விளக்கை வைத்துக் கொட்டுக் கூடையால் மூடுவானேன்.

(பொட்டுக் கூடையால்.)

கோபுரத்தின் மேல் ஏறிக் கும்பத்தைக் கழற்றுகிறவன் அகத்திக் கீரைக் கொல்லையைப் பார்த்துக் கொள்ளை கொள்ளை என்றானாம்.

கோபுரத்தின்மேல் குரங்கு உட்கார்ந்தாற் போல.

கோபுரத்தைப் பொம்மையா தாங்குகிறது? 9975


கோபுர தரிசனம் பாபவிமோசனம்

கோபுரம் ஏறிக் குதித்தாற் போல.

கோபுரம் தாங்கிபோல நடக்கிறான்.

கோபுரம் தாங்கிய பூதம் போல் சுமக்கிறான்.

கோபுரம் தாங்கிய பொம்மை போல். 9980


கோபுரம் தாண்டுகிற குரங்குக்குக் குட்டிச்சுவர் என்ன பிரமாதம்?

கோபுரமும் எட்டும்; குபேரனுக்கும் கை சளைக்கும்.

கோபுர ഖஸ்து.

கோபுர விளக்கைக் கூடையால் மூடுவானேன்?

கோம்பை நாயைப் போல் கோபிக்காதே. 9985


கோமாளி இல்லாத கூத்துச் சிறக்குமா?

கோமாளிக் கூத்து.

கோமுக வியாக்கிரம் போல.

(வியாக்கிரம் - புலி)